செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீமான், இலவசம் என்பது ஒரு ஏமாற்று திட்டம் மக்கள் பணத்தை எடுத்து இலவசம் என்ற பெயரில் ஏமாற்றுகிறார்கள் அண்ணாமலை திமுக ஊழல் குறித்து பேச என்ன தகுதியிருக்கு?பாஜக ஆட்சியில் ரபேல் விமானம் ஊழல் நடந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு வரும் பொழுது பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்த கோப்புகள் காணாமல் போனது எப்படி? நீரவ்மோடி இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்கு தப்பி செல்லும் போது ரூ.500 கோடி பாஜகவுக்கு கொடுத்த பின்புதான் நாட்டை விட்டு நான் தப்பினேன் என்று கூறி உள்ளார்.
திமுக ஊழலை மட்டும் பேசுகிறார் அதிமுகவின் பத்தாண்டுகால ஊழல் குறித்து ஏன் பேசுவதில்லை? நேர்மையானவர் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும். மலையை உடைத்து எம் சாண்ட் விற்பனை செய்கிறார்கள் மலையை உருவாக்க முடியுமா? கன்னியாகுமாரியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் பாதியை அதானி நொருக்கி உள்ளார். அதை பற்றி அண்ணாமலை பேசுவது இல்லை.
பாஜகவிற்கு சாதி, மதம் சாமி இதைத்தவிர வேறு கோட்பாடுகள் இல்லை. தமிழகத்தில் இரண்டு அமைச்சர் மட்டும்தான் ஊழல் செய்துள்ளார்களா? மற்ற அமைச்சர்கள் எல்லாம் நேர்மையானவர்களா? நான் கிருஷ்ண பரமாத்மாவின் பேரன் – நான் ஒரு அவதாரம்; அநீதி அக்கிரமம் நடக்கும் இடத்தில் நான் வந்து நிற்பேன்” என்று கூறினார்.