• Sat. Mar 21st, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படவில்லை.. மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் பேட்டி..!

மதுரை மாவட்டத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் யாரும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படவில்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் தெரிவித்துள்ளார்.


செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து பேசியதாவது..,
மதுரை மாவட்டத்தில் மாநகர் பகுதிகளில் 55.74சதவிதமும், புறநகரில் 63சதவித மக்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்டுள்ளனர். இண்டாவது டோஸ் செலுத்த வேண்டிய 1லட்சத்தி 34ஆயிரம் பேர் கண்டறியப்பட்டு குறுஞ்செய்தி அனுப்பபட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் 10ஆயிரத்தி 798பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


வரும் ஞாயிற்றுக்கிழமை 5ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 1400 மையங்களில் 1.5லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடற்ற ஏழைகள், ஆதரவற்றோர், சாலையோர வசிப்பவர்களுக்கு நடமாடும் முகாம்கள் மூலமாக தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய யாரும் உயிரிழக்கவில்லை.

இரு மாதங்களில் முதல் டோஸ் செலுத்தியவர்களில் 89பேருக்கும், இரண்டு டோஸ்களும் செலுத்திய 33பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும் முதல் தடுப்பூசி செலுத்தியவர்கள் 7பேர் மட்டுமே ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் யாரும் ஐசியூவில் அனுமதிக்கவில்லை. தடுப்பூசி தான் உயிரிழப்புகளை தடுக்கிறது என்பதை உணர்ந்து பொதுமக்கள் தடுப்பூசியை செலுத்திகொள்ள முன்வர வேண்டும். மதுரை மாநகராட்சி பகுதியில் 11வார்டுகளில் 100சதவிதம் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.