• Sun. Jul 26th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

வனப்பகுதியில் வீசப்பட்டுள்ள அழுகிய நிலையில் ஆட்டு குட்டிகள்..,

Byசோலைஆதி

Mar 21, 2026

சோழவந்தான் அருகே மேலக்கால் கணவாய் கருப்பு கோவில் அருகில் உள்ள வனப்பகுதியில் அழுகிய நிலையில் சுமார் 40 ஆட்டுக்குட்டிகள் வீசப்பட்டிருப்பதாக மேலக்கால் கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமரனுக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில் சம்பவ இடத்துக்குச்சென்று பார்த்த பொழுது மிகவும் அழகிய நிலையிலும், அழுகிய நிலையிலும் சுமார் 40 ஆட்டுக்குட்டிகள் திறந்த நிலையிலும், சாக்கு முட்டையிலும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கால்நடை துறை மற்றும் வனதுறைக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் கால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்து இதை பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அழுகிய நிலையில் ஆட்டுக்குட்டிகள் கிடந்த இடம் வனப்பகுதி என்பதால் வனத்துறைக்கும் தகவல் கொடுத்து வனத்துறை சேர்ந்த வன காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.

இது தினசரி இறந்த ஆட்டுக்குட்டிகளை சாக்கு முட்டையிடும் தனியாக வீசப்பட்டு இருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வருவதாக கூறுகின்றனர். இதனால் இப்பகுதியில் சுகாதார கேடு இருப்பதாக உள்ளாட்சி துறை தெரிவித்தனர். காடுப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் கமலமுத்து மற்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.