• Mon. Jul 13th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

குற்றங்களைக் கண்டறிய பாலங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்படுமா?

ByKalamegam Viswanathan

Mar 21, 2026


மதுரை மாநகரில் கட்டப்பட்டுள்ள முக்கியப் மேம்பாலங்களில் கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) பொருத்தப்படாததால், விபத்துகள் மற்றும் குற்றச் செயல்களைக் கண்டறிவதில் போலீசாருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
​சம்பவப் பின்னணி:

சமீபத்தில் ஒருவர் விபத்தில் சிக்கினால் அவர்கள் தானாக விழுந்து விபத்தில் சிக்கினார் அல்லது மற்ற வாகனங்கள் மோதியதால் அவர் வாகனத்தில் வரும்போது தானாக விழுந்தாரா அல்லது வேறு ஏதேனும் வாகனம் மோதி விழுந்தாரா என்பதை உறுதி செய்ய முடியாமல் சட்டம் ஒழுங்கு போலீசார் விபத்து புலனாய்வு போலீசார் திணறினர். விபத்தின் தன்மை உறுதி செய்ய முடியாமல் , காவல்துறையினருக்கு சிரமமாக உள்ளது.

முக்கியப் பாலங்களின் நிலை:
மதுரையில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன:
மேலமடை சந்திப்பில் ₹50 கோடி செலவில் கட்டப்பட்ட வேலுநாச்சியார் பாலம்.
​கோரிப்பாளையம் பகுதியில் ₹196 கோடி செலவில் கட்டப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பாலம். இவை தவிர நத்தம் சாலை பாலம், பைபாஸ் ரோடு வ.உ.சி பாலம், தெற்குவாசல் பாலம் உள்ளிட்ட பல பாலங்களில் இன்னும் முறையான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை.

கோரிக்கை:
கேமராக்கள் இல்லாத காரணத்தால் பாலங்களில் நடைபெறும் விபத்துக்கள், திருட்டு அல்லது சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களை அடையாளம் காண்பது சவாலாக உள்ளது. இதுபோன்ற அசௌகரியங்களைத் தவிர்க்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உடனடியாக அனைத்துப் பாலங்களிலும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.