


சர்வதேச எல்லைப் பகுதி வழியாக இந்தியாவிற்குள் பயங்கரவாதிகள் நுழைந்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து காஷ்மீரில் 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சர்வதேச எல்லைப் பகுதியான இந்தியாவிற்குள் லஷ்கர்- இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ- முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் நுழைந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. குறிப்பாக காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக புகார் எழுந்தன. இதுகுறித்து உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி என்ஐஏ அதிகாரிகள் காஷ்மீரில்12 இடங்களில் இன்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

உளவுத்துறையிடம் இருந்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவல் துறை மற்றும் பாதுகாப்பு படை ஒத்துழைப்புடன் இன்று காலை என்ஐஏ. அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர். இதனால் காஷ்மீரில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

