• Thu. Jun 4th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

தினமலர் வழங்கும் சிறந்த பள்ளிக்கான பாராட்டு பத்திரம் பெற்ற என்ஜிஓ காலனி செயின்ட் சேவியர்ஸ் நர்சரி & பிரைமரி பள்ளி..!

Byதரணி

Dec 1, 2023

பாளையங்கோட்டை என்ஜிஓ ஏ காலனியில் செயின்ட் சேவியர்ஸ் நர்சரி & பிரைமரி ஸ்கூல் இயங்கி வருகிறது. 1971 ல் துவங்கப்பட்ட இந்த பள்ளி 50 ஆண்டுகளை கடந்து மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது. தற்போது 320 மாணவ, மாணவியர் இந்த பள்ளியில் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் முதல்வர் அருட்சகோதரி. சந்தான மேரி நிர்வாகத்தின் கீழ் திறமையான ஆசிரியைகள் பணியாற்றி வருகிறார்கள். இப்பள்ளியில் வழக்கமான கல்வியுடன் மாணவ, மாணவியரின் திறமைகளை வெளிக் கொணறும் வகையில் பல்வேறு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர் பல்வேறு போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். நெல்லை தினமலர் பத்திரிக்கை மற்றும் வெங்கடாம்பட்டி டிரஸ்ட் சேவை நிறுவனம் இணைந்து இப்பள்ளிக்கு “சிறந்த பள்ளிக்கான பாராட்டு பத்திரம்” வழங்கும் நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நெல்லை தினமலர் நிர்வாக இயக்குனர் தினேஷ் மற்றும் சமூக ஆர்வலர் திருமாறன் ஆகியோர் சிறந்த பள்ளிக்கான பாராட்டு பத்திரத்தை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள். பள்ளி முதல்வர் அருட்சகோதரி சந்தான மேரி மற்றும் பள்ளி ஆசிரியைகள் ரதி, செலின் மேரி,பீமு, பேபி, சுபா சங்கரி, டெல்பின் பிரின்சி, விஜி, சிவராணி, மாலா, தங்கம் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.