• Sun. Apr 28th, 2024

குருவிகுளத்திற்கு ஒன்றிய செயலாளர் யார்? உண்மையை உடைக்கும் ரத்தத்தின் ரத்தங்கள்..!

ByKGR Rakshana

Dec 1, 2023

அஇஅதிமுக வின் பூத்து கமிட்டிக்கான வேலை மிக மும்மராமாக நடந்து கொண்டு வரும் வேலையில் குருவிகுளத்தில் உள்ள வடக்கு ஒன்றிய செயலாளர் யார்? என்ற பரபரப்பு அங்கு உள்ள ரத்தத்தின் ரத்தங்கள் மத்தியில் முணுமுணுக்கத் தொடங்கியிருக்கிறது.


தென்மாவட்டங்களிலேயே எப்போதுமே பரபரப்புக் கொண்டிருக்கும் மாவட்டம் தென்காசி மாவட்டம்தான். இந்த மாவட்டத்தில் குருவிகுளம் ஒன்றியத்திலிருந்து, சமீபத்தில் நடந்த மதுரை அதிமுக மாநாட்டிற்கு அங்கிருந்த வந்த குருவிகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் வரும் வழியிலேயே மரணம் அடைந்தார். இது அனைவரையும் வருத்ததிற்கு உள்ளாக்கியது. இதனால் குருவிகுளம் வடக்கு ஒன்றியச்செயலாளர் பதவி காலியாகத்தான் உள்ளது. இந்தப்பதவிற்கு குருவிகுளம் ஒன்றியத்தில் உள்ள ரத்தத்தின் ரத்தங்கள் பூத் கமிட்டி நியமான வேலையோடு வேலையாக யாராப்பா ஒன்றிய செயலாளரா நம் பகுதிக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா நியமனம் செய்யப் போறாரு என்ற கேள்விகளை தனக்குள் வைத்துக் கொண்டும் குட்டியப்பாவிடமும் எனக்கு அந்த பதவியை கொடுங்க அண்ணே நாங்க யாரும் மதிமுக பக்கம் விசுவாசமா இருக்க மாட்டோம்.

தேவராஜ்

அண்ணே எடப்பாடி பக்கம் மட்டும்தான் விசுவாசமா இருப்போம் என்று ஏக மனதாக பேசி வருகின்றனர்.

ராஜேஷ்

இது பற்றி மேலும் விவரம் அறிய, தென்காசி மாவட்டம் குருவிகுளத்தில் உள்ள பதவிகளை விரும்பாத மூத்த ரத்தத்தின் ரத்தங்கள் சிலரிடம் நாம் பேசினோம்.
“எங்க ஒன்றியத்தில ஒன்றிய செயலாளர் இல்லாததாலே கட்சி வேலையெல்லாம் கொஞ்ச ஸ்லோவாகத்தான் போகுது. ஆனா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவி அம்மா, மக்களின் நாயகன் எங்க முதலமைச்சர் எடப்பாடியார், மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி குட்டியப்பா இவர்களின் ஆசியோடு பூத் கமிட்டி நியமன வேலை மிக சரூரகத்தான் போகுது. கட்சிப்பணியை பொறுத்த அளவிற்கு நேரடியா களத்தில செயல்படுறதக்கு இந்த பகுதியில ஆள் இல்லாததால குருவிகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் பதவிக்கு தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் நவீன்ராஜ், வெங்கடாசலபுரம் முன்னாள் கூட்டுறவு சங்க செயலாளர் தேவராஜ், ஒன்றிய இளைஞர் – இளம்பெண்கள் பாசறை செயலாளர் ராஜேஷ் மற்றும் சிலர் இந்தப் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

இதில் நவீன்ராஜ் ஆக்டிவ்வான நபர்தான். இந்த குருவிகுளம் வடக்கு ஒன்றியத்திற்கு மொத்தம் 96 கிளைகள் இருக்கு, இதில் 94 கிளை செயலாளர்கள் நவீன்ராஜ்- க்கு பரீட்சமான நபர்தான். இதை ஏன் நாங்க அழுத்தி நம்பிக்கையா சொல்றமான குருவிகுளத்தை பொறுத்த வரைக்கு மதிமுக கோட்டைதான். மத்த எல்லாரும் மதிமுகயோட மறைமுகமா கைகோர்த்து தான் இருப்பாங்க”…

நவீனராஜ்

“நவீனராஜ் அப்படி இல்ல. பூத் கமிட்டி வேலையில தன் அர்ப்பணிப்ப முழுமையா காட்டி முதல்ல மாவட்ட செயலாளரிடம் வேலையை முடித்து கொடுத்துதே இவர்தான். தகவல் தொழில் நுட்ப அணியில திறன்பட செய்பவரும் செயலாக்கப்படுத்தறதும், அன்பா வேலை வாங்குறதும் இவருக்கு கைவந்த கலையா இருக்கு”… என்றனர் மூத்த ரத்தத்தின் ரத்தங்கள்.
மேலும் இது பற்றி தகவல் அறிய, தென்காசி மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா-வுடன் இருக்கும் ரத்தத்தின் ரத்தங்கள் சிலரிடம் பேசினோம்.

குட்டியப்பா

“இன்னும் ஒருசில தினங்களில் தென்காசி மாவட்டத்தில் உள்ள குருவிகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் பதவி நியமனம் இருக்கும். அதற்கான வேலையை எங்க அண்ணே குட்டியப்பா திறம்பட செஞ்சுகிட்ட இருக்கறாரு. அனேகமாக ஒரு இளைஞருக்கு அதுவும் அதிமுகவை வளத்துக்கிட்டுருக்க ஒரு நபருக்குத்தான் அந்த பதவி… என்று மெதுவாக காதை கடித்தனர்.
எது எப்படியோ இன்னும் ஒரு சில தினங்களில் ஒரு இளைஞர் குருவிகுளத்திற்கு ஒன்றியச் செயலாளராக பதவி ஏற்கப்போவது தான் உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *