டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய பிறகு பிரதமர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, அனைவருக்கும் நல்லாட்சி. அனைவருக்கும் வளர்ச்சி என்ற இலக்குடன் நாம் தற்பொழுது பயணத்து வருகிறோம். அடுத்த 25 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானது என பிரதமர் கூறினார். மேலும் இந்தியாவின் 130 கோடிக்கும் அதிகமான மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒருவரின் வளர்ச்சிக்கு இன்னொருவர் உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் இந்தியாவின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இருந்து அடிமைத்தனம், அடக்குமுறை அகற்றப்பட வேண்டும் எனவும் பேசினார். மேலும் அனைவரும் வாருங்கள் என்னுடன் சேர்ந்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள், அனைவரும் ஒன்றாக முன்னேறுவோம். நமது நாட்டின் மொழிகளின் பெருமையை நாடு முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும். நமது ஒவ்வொரு மொழியும் போற்றப்பட வேண்டும் அதை குறித்து நாம் பெருமை கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் பல முக்கிய அறிவிப்புகளை இந்த உரையில் பிரதமர் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.