குடியிருப்புப் பகுதிகளில் உள்ள ஸ்கூட்டியின் கைப்பிடியிலிருந்து ஒரு நாகப்பாம்பு சீறி பாயும் வீடியோ வைரலாகி வருகிறது. வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா என்பவர், தனது ட்விட்டர் கணக்கில் இதை பகிர்ந்துள்ளார்.
பாம்பை மீட்பவர் ஹாண்டில் பாரை கம்பியால் திருப்பியதும் நாகம் வெளிவந்து, படம் எடுத்ததை பார்த்து மக்கள் பயத்தில் உறைந்தனர். பாம்பு தாக்கவும் முயன்றது. ஆனால், பாம்பு பிடிப்பவர், அதனை மிக லாவகமாக, பாட்டிலுக்குள் அடைத்து மூடி விட்டார்.
அவர் தொடர்ந்து 2-3 முறை முயன்று அதனை தண்ணீர் கேனுக்குள் அடைத்து விட்டார்.
“மழையின் போது இத்தகைய விருந்தினர்கள் வருவது சகஜம் தான் … ஆனால் அதை பிடிக்க இவர் மேற்கொள்ளும் முறை ஆபத்தானது. இதை ஒருபோதும் முயற்சிக்க வேண்டாம். ” என இது குறித்து ட்விட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.