• Fri. Mar 29th, 2024

ஸ்டாலின் தலைமையில் உருவாகும் புதிய அணி

அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு ஓபிஎஸ் உள்ளிட்ட 37 தலைவர்களுக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

‛கூட்டாட்சி மற்றும் சமூகநீதிக் கோட்பாடுகளை வென்றெடுக்க அரசியல் கட்சித் தலைவர்கள், குடிமைச் சமூகத்தின் உறுப்பினர்கள், ஒத்த சிந்தனையுள்ள தனிநபர்கள் ஆகிய அனைவரையும் ஒரு பொதுவான குடையின் கீழ் ஒன்றிணைத்து, அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு ஒன்றைத் தொடங்கவுள்ளதாக அறிவித்தேன். எல்லாருக்கும் எல்லாம் என்பதை அடிப்படையாய்க் கொண்டதுதான் சமூகநீதியாகும். சமூகநீதி என்பது அனைவருக்கும் சமமான பொருளாதார, அரசியல், சமூக உரிமைகளும் வாய்ப்புகளும் அமையவேண்டும் என்ற எண்ணம்தான். அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் என்பதை உறுதிசெய்வதன் வழியாகத்தான் நமது அரசியல் சட்டத்தை இயற்றியவர்கள் காண விரும்பிய சமத்துவச் சமுதாயத்தை கட்டியமைக்க முடியும்’’
என்று தொடங்கும் ஒரு கடிதத்தை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், இந்தியா முழுவதும் உள்ள 37 அரசியல் கட்சி தலைவர்களுக்கு அனுப்பியுள்ளார்.
ஜெயலலிதாவின் பிம்பத்தை தேசிய அளவில் உயர்த்த வேண்டும் என்று 2014 முயற்சி செய்தனர். ஆனால் அதற்கு காலம் கை கொடுக்க வில்லை. தற்போது பாஜகவை எதிர்ப்பதற்கு ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள பாஜக எதிர்ப்பாளர்களை அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பு என்ற பெயரில் ஒன்றிணைத்து 2024 தேர்தலில் நெருக்கடி கொடுக்க திமுக முயற்சி செய்து வருகிறது. இதிலும் சில சலசலப்பு சர்ச்சைகள் தற்போது எழுந்துள்ளன.

இந்த கடிதம் இந்தியாவில் உள்ள முக்கியமான 37 தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.அதிமுகவை சேர்ந்த ஓபிஎஸ்க்கு கூட கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.ஆனால் திமுகவின் தாய் கழகமான திகவிற்கு இதில் அழைப்பு இல்லை.அதே போல மனித நேய மக்கள் கட்சி, மனித நேய ஜனநாயககட்சி, ஐஜேகே. தமிழர் வாழ்வுரிமை கட்சி போன்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை.இதனால் வாக்குவங்கிக்கு மட்டும் நாங்கள் தேவைப்படுகிறோமா என்ற அதிருப்தியில் உள்ளதாக தகவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *