• Sun. Aug 2nd, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி போட்டு மக்களை ஏமாற்றி விடலாமா ?

ByKalamegam Viswanathan

Aug 2, 2026

5 தொகுதி இடைத்தேர்தல் தடையை நீக்க கோரி விராலிமலை விஜயபாஸ்கர், கரூர் விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன அதில் அவர்கள் மக்கள் பிரதிநிதி இல்லாமல் இந்த தொகுதிகளில் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்கிற அந்த நல்ல எண்ணத்தில் தூய எண்ணத்திலே, பதவி ஆசையே இல்லாத எண்ணத்திலே, பதவி வெறியே இல்லாத எண்ணத்திலே, பதவி மோகம் இல்லாதஎண்ணத்திலே, தான் இந்த கோரிக்கையை நீதிமன்றத்தில் வைத்திருக்கிறார்கள் மக்கள் மீது எவ்வளவு அக்கறை?

விராலிமலை விஜய் பாஸ்கருக்கும், கரூர் விஜயபாஸ்கருக்கும் நடந்து முடிந்த தேர்தலில் சட்டமன்ற வேட்பாளராக எடப்பாடியார் முன்னிறுத்தி அவர்களுக்கு தேர்தலில் வெற்றி பெற தேர்தல் பிரச்சாரம் முன்னெடுத்தார் .இதனை தொடர்ந்து எடப்பாடியார் அறிவித்த அந்த அறிவிப்பை தலையாய கொண்டு இரவு பகல் பாராது ரத்ததை வியர்வையாக சிந்தி உழைத்து அவர்களை வெற்றி பெற வைத்தார்கள் தொகுதி மக்களும் இரட்டை இலையை வெற்றி பெற வைத்தார்கள்.

என்ன காரணத்திற்காக இவர்கள் ராஜினாமா செய்தார்கள் அவர்களுக்கு இனிமேல் மக்கள் பணி செய்ய முடியாத மனநிலை பாதிக்கப்பட்டு விட்டதா அல்லது மக்கள் பணி செய்ய முடியாத ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்களா? உடல் ரீதியாகவா ? மனரீதியாகவா? பொதுவாழ்க்கைக்கு தகுதி இல்லாமல் போய்விட்டார்களா அல்லது இனிமேல் பொதுவெளியில் நடமாட முடியாதா காரணத்தினாலே ராஜினாமா செய்தார்களா!

நீதிமன்றத்திலே மக்கள் பிரதிநிதி இல்லாமல் தொகுதி மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்று சொல்லும் அவர்கள் நாங்கள் இந்த மக்கள் பிரச்சனைக்காக இந்த மக்கள் தேவைக்காக ,இந்த மக்கள் விருப்பத்திற்காக இந்த மக்களின் உரிமை காப்பதற்காக , ராஜினாமா செய்தோம் என்று அவர்கள் நீதிமன்றத்திம், சட்டமன்றம் அவர்கள் எங்கே விரும்புகிறாரோ அங்கே இதற்கு விளக்கம் சொல்ல முன் வருவார்களா?

கட்சியிலே இரண்டு கோடி தொண்டர்கள் உள்ளனர் கடைக்கோடியில் இருக்கிற போது உங்களுக்கு எதற்கு அமைச்சர் பதவி கொடுத்தார்கள்?நீங்கள் மாடமாளிகை கட்டிகொள்வதற்காகவா,கல்லூரிகளை கட்டுவதற்காகவா, சாலை ஒப்பந்தங்களை எடுத்துக்கொண்டு நீங்கள் குபேரனாக வாழ்வதற்காகவா, எதற்காக உங்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தார்கள்? தொண்டர்களை பாதுகாக்க வேண்டும், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் ,சோதனை காலத்திலே கழகத்திற்கு துணிந்து இருக்க வேண்டும், நிற்பீர்கள் என்கிற நம்பிக்கையில் தான் கடைக்கோடியில் உள்ள உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த பதவியை வைத்துக்கொண்டு ,பதவி சுகத்தை அனுபவித்து, அதிகாரத்தை அனுபவித்து, இன்றைக்க அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஒரு சத்திய சோதனை வந்தால்,
இன்றைக்கு மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய நேரத்தில் கழகத்திற்கு உறுதுணையாக விசுவாசமாக இருக்க வேண்டிய நேரத்தில், கழகத்தை காட்டி கொடுத்துவிட்டு எட்டப்பர்களாக நீங்கள் அங்கே போவது மட்டும் இல்லாமல் ,அதோடு இன்றைக்கு உடனடியாக தேர்தல் என்ன அவசர உங்களுக்கு, அங்கே போய் சட்டமன்ற உறுப்பினராகி,அமைச்சராகி விஜய்க்கு முக்காடு போட நீங்கள் தயாராகி விட்டீர்கள் .

அதிமுக தொண்டர்களைப் போல த.வெ.க கட்சி தொண்டர்கள் ஏமாளிகள் அல்ல உங்களிடத்தில் அதிகாரத்தை கொடுத்து நீங்கள் குபேரனாக வாழுங்கள் நாங்கள் வேடிக்கை பார்க்கிறோம் என்று வேடிக்கை மனிதர்கள் அல்ல. அங்கே விஜய் கட்சியில் இருக்க கூடிய த.வெ.க கட்சிக்காரர்கள் உங்களைவிட நடிக்க தெரிந்தவர்கள், உங்களைவிட படிக்க தெரிந்தவர்கள், உங்களைவிட ஏமாற்ற தெரிந்தவர்கள், உங்களைவிட மூளை சலவை செய்ய தெரிந்தவர்கள். உங்களை விட ஜிகினா காட்டத் தெரிந்தவர்கள் உங்கள் ஜிகினா வேலை விஜிய்யிடம் எடுபடாது

வித்தை காட்டுவதில் விஜயபாஸ்கரா, விஜய்யா என்று போட்டி வைத்தால் விஜயபாஸ்கருக்கு வெற்றி கிடைக்காது ஏனென்றால் தமிழ்நாட்டில் வித்தை காட்டியவர் முதல்வர்விஜய் . வித்தையில் காட்டுவதில் விஜயபாஸ்கர் சிறந்தவர் என அதிமுகவில் பட்டம் பெற்று இருக்கலாம் உங்கள் வித்தை விஜய் கட்சியில் எடுபடாது என காலம் பதில் சொல்லும்.

இப்போது த.வெ.க உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினரும் ,மாவட்ட செயலாளர் விஜய் மகாலிங்கம் மாவட்ட காவல்துறையிடம்
என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை, எனக்கு பாதுகாப்பு கொடுக்கணும் மனு கொடுத்திருக்கிறார்கள் .சொந்தக் கட்சியில இருக்கிற மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினரை காப்பாற்ற முடியாத நிலையில் தான் விஜய் அரசு உள்ளது.

தொல்லைகள், துயரங்கள் துரோகங்கள், எதிர்ப்புகள் சூழ்ச்சிகள் அத்தனையும் முறியடித்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எடப்பாடியார் நிச்சயமாக மீட்டெடுத்து காப்பாற்றி மீண்டும் இந்த நாடு போற்றுகிற வகையில் சரித்திர சாதனை படைத்து காட்டுவார். இப்போது நீங்கள் காண்கிற கனவு காணல் நீராகத்தான் போகும் நீங்கள் எந்த முகத்தோடு மக்களை சந்திப்பீர்கள்.

நீங்கள சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி போட்டு மக்களை ஏமாற்றி விடலாமா ?ஸ்கார்பியோ கார் வாங்கி குடுத்து ஏமாற்றி விடலாமா? யார் அப்பன் வீட்டு சொத்து? யார் அப்பன் வீட்டு சொத்தில் வாங்கி கொடுக்கிறீர்கள்?
த.வெ.க.வில் சேர்ந்து ,அண்ணா திமுகவினர் ரத்தத்தை அட்டையாக உறிஞ்சி இன்றைக்கு பிரியாணி போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் கார் வாங்கி தந்து வருகிறீர்கள்.

விஜயபாஸ்கர் அவர்களே நீங்கள் தங்கத்தை உருக்கி , வைரத்தையும் மாணிக்க கற்களையும் பதித்து விஜய்க்கு கிரீடமாக சூட்டினாலும் உங்களை ஒரு பைத்தியக்காரனும நம்ப மாட்டார்கள்.

உங்களுடைய துரோகம் ,சூழ்ச்சி,
சூதுகளை அண்ணா திமுகவை விட த.வெ.க.கட்சி மிகத் தெளிவாக புரிந்து வைத்திருப்பார்கள். இவ்வளவு பதவிகளை கொடுத்து , அதிகாரத்தை கொடுத்து, செல்வாக்கை பொருளாதாரத்தை கொடுத்து உயரத்தில் வைத்த அண்ணா திமுகவை காலிலே தூக்கிபோட்டு விஜயபாஸ்கர், விஜய்யை தூக்கிப்போட்டு மிதிப்பதற்கு எவ்வளவு நேரம் ஆகுது என்ற அந்த ஒற்றைக் கேள்வியை மட்டும் த.வெ.கவினர் முன் வைக்கிறேன்.

வழக்கு போட வெட்கமில்லை, மானமில்லை ரோஷம் இல்லை, உப்பு போட்டு சாப்பிடுறீங்களா இல்லையா? தேர்தல் வழக்கு இருக்கிறது என்று நீதிமன்றம் உத்தரவிட்டற்கு பிறகும் தேர்தல் ஆணையம் இதில் குதிரை பேரம் நடந்திருக்கிறது என்பது கட்சி தாவல் தடை சட்டத்திலே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் நிலுவையில் இருக்கிறபோது, உங்களுக்கு இடைத்தேர்தலை அவசரம் ,அவசரமாக நடத்தி உங்களுக்கு அமைச்சராக மகுடம் சூட்டுவதற்கு தமிழ்நாட்டு மக்கள் ஒன்றும் தெரியாத அப்பாவிகள் அல்ல, எல்லாம் தெரிந்தவர்கள் மாமேதைகள், உங்களுக்கு தக்க பாடத்தை நிச்சயமாக மக்கள் புரிய வைப்பார்கள். 2 விஜயபாஸ்கர்களுக்கும் காலம் தக்க பாடத்தை புகட்டும் மக்கள் அந்த தீர்ப்பை எழுதுவார்கள் என கூறினார்.