ஏழை மக்களின் பசி தீர்க்க வந்ததோ அம்மா உணவகம்.பல மக்கள் இந்த திட்டத்தால் பசி ஆற உணவு உட்க்கொண்டனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2013-ம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் அம்மா உணவகம் திட்டத்தை தொடங்கினார். ஏழை எளிய மக்களுக்கு மிகக் குறைவான விலையில் உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது 654 அம்மா உணவகங்கள் தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வகுகின்றது.
இந்த நிலையில், கடந்த தேர்தலில் தி.மு.க ஆட்சியைக் கைப்பற்றியதும் அம்மா உணவகம் மூடப்படும் எனத் தகவல்கள் வெளியாகின. அவ்வாறு இல்லாமல் முதல்வர் ஸ்டாலின், அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என அறிவித்தார்.எந்த தங்கு தடையும் இல்லாமல் மகக்ளிடம் இத்திட்டம் போய் சேரந்தது. நாடு முழுவதும் பட்டினி இல்லாத நிலையை உருவாக்க சமூக சமையல் கூடங்களை அமைக்க வலியுறுத்தி வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் தமிழகத்தில் 4 வயது சிறுவன் பட்டினியால் உயிரிழந்தது தொடர்பாக உச்சநீதிமன்றம் வருத்தம் தெரிவித்தது.இதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு, 654 சமூக சமையல் கூடங்கள் “அம்மா உணவகம்” என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள கோயில்களில் சுமார் 66 ஆயிரம் பேருக்கு நாள்தோறும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.தமிழ்நாட்டில் விரைவில் 500 கலைஞர் உணவகங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. தமிழ்நாட்டில் ஒருவர் கூட பசியுடன் இரவு உறங்கப் போவதில்லை” என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.