• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

நிறைவேற்றப்படாத கோரிக்கை மனுவினைஅமைச்சர் ஆனந்திடம் வழங்கிய கருப்பையா எம்.எல்.ஏ..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.வீ. கருப்பையா, சோழவந்தான் தொகுதி மக்களின் நீண்ட நாள் நிறைவேற்றப் படாமல் உள்ள 5 அம்ச கோரிக்கை சம்பந்தமான மனுவினை ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்திடம் வழங்கினார்.அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி விவசாயிகள் நிறைந்த தொகுதி, அந்தஏழை எளிய விவசாயி களின் நிறைவேற்றப்படாத நீண்ட நாள் கோரிக்கையாகபல்வேறு கோரிக்கைகள் உள்ளது.அதில் குறிப்பாக 5அம்ச கோரிக்கைகளாக 10 ஆண்டு மூடியிருக்கும் அலங்காநல் லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறந்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும், கரும்பு விவசாயிகள் வாழ்வாதாரம் செழிக்கவும் உதவிட வேண்டும். பாலமேடு சாத்தையாறு அணையினை தூர்வாரி பெரியாறு பாசன கால்வாய் தண்ணீரை தேக்கி விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்.

அரசு மகளிர் கலைக் கல்லூரி அமைக்க வேண்டும்.புவிசார் குறியீடு பெற்ற சோழவந்தான் வெற்றிலைக்கு ஆராய்ச்சி கூடம் அமைக்க வேண்டும். பாலமேடு பகுதியில்சுவை மிகுந்த மா, கொய்யாபழங்களின் விளைச்சலை கருத்தில் கொண்டுபதப்படுத்தி பழச்சாறு தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.வாடிப்பட்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்துடன் சோழவந்தான் தொகுதி வழக்காடிகள் பயன்பெறும் வகையில் புதியதாக மாவட்ட துணை நீதிமன்றம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நீண்ட நாள் நிறைவேற்றப்படாமல் இருந்து வருகிறது.

அந்தக் கோரிக்கைகளை தாங்கள் மக்களின் முதல்வரின் உத்தரவு பெற்று நிறைவேற்றி ஏழை எளிய நடுத்தர மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அருள்கூர்ந்து வேண்டுகிறேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.