• Sat. Aug 1st, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

எம்பி வெங்கடேசனுக்கு குப்பை தொட்டி விருது வழங்கும் நிகழ்வு நடத்தப்படும் என இந்துமக்கள்கட்சி அறிக்கை செய்தி!

ByKalamegam Viswanathan

Aug 1, 2026

மதுரையில் திமுகவின் ஆதரவால் இரண்டு முறை வெற்றி பெற்ற எம்பி சு.வெங்கடேசன் அவர்கள் கோவில் மாநகரமாக தூங்கா நகரம் என பெயர் பெற்ற மதுரை மாநகரத்தை குப்பை மாநகரமாக ஆக்கியதை பற்றியும்,மதுரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பிரதிநிதியான தனது தொகுதியில் மாநகராட்சியில் நடைபெற்ற 200 கோடி ஊழலை பற்றியும்,சாலை வசதி,மின்சார வசதி,குடிநீர் வசதி போன்ற அடிப்படை பிரச்சனைகளை பற்றியும்,விலைவாசி உயர்வு,மின்கட்டணம்,சொத்துவரி போன்ற விலை உயர்வை பற்றியும், தூய்மை பணியாளர்கள்,ஆசிரியர்கள், செவிலியர்கள்,அங்கன்வாடி பணியாளர்கள போன்ற மதுரையில் தினந்தோறும் நடைபெற்று வரும் பல போராட்டங்களை பற்றியும்,அசுத்தமாக கிடக்கும் வைகை நதியை கூவம் சாக்கடையாக மாறி வருவதை பற்றியும்,குடும்பம் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கைகளை சீர்குழைக்கும் போதை கலாசாரத்தை பற்றியும்,கொலை,கொள்ளை போன்ற சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை பற்றியும்,
தங்களை தேர்ந்தெடுத்த மதுரை மக்களின் நலனுக்கோ,தொகுதியின் வளர்ச்சிக்கோ,இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்கோ எந்த ஒரு தொழிற்சாலை திட்டங்களுக்காக பாராளுமன்றத்தில் இதுவரைக்கும் சு.வெங்கடேசன் எந்த ஒரு குரலும் கொடுக்கவில்லை.எந்த ஒருதிட்டங்களையும் மதுரைக்கு கொண்டு வரவில்லை.

ஆனால் வெற்றி பெற்ற நாளிலிருந்தே பாராளுமன்றத்தில் தமிழர்களின் அடையாளமான செங்கோல் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும், வடமாநிலங்களில் ஹிந்தி பேசும் கம்யூனிஸ்ட் தேசிய தலைவர்களிடம் சரளமாக ஹிந்தி பேசிகிட்டு ஹிந்தி எதிர்த்து பேசுவதும்,கம்யூனிஸ்ட் கட்சி ஆண்ட கேரளாவில் நீட்டுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு நீட்டுக்கு எதிரா இளைஞர்களை தூண்டிவிட்டு பேசுவதும், விருதுநகர் பாராளுமன்ற தொகுதியான திருப்பரங்குன்றம் புனிதமான முருகப்பெருமானின் மலை மீது ஆடு கோழி பலியிடுவதற்கு ஆதரவு தெரிவிப்பதும்,நீதிமன்ற தீர்ப்பின் படி தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற விடாமல் தடுத்து நிறுத்தி பிரிவாத நக்சல்வாதிகளை கலவரத்திற்கு தூண்டிவிட்டு தீர்ப்பளித்த நீதியரசர் மாண்புமிகு ஜி.ஆர் சாமிநாதன் அவர்களை பதவி விலக பேசுவதும், மணிப்பூர்,காஷ்மீர்,உபி,குஜராத் போன்ற இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் ஏதேனும் பிரச்சனை என்றாலும் பாராளுமன்றத்தில் எது எதற்கோ வாய் கிழிய குரல் கொடுத்து பேசியும், தங்களை தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு எந்த ஒரு குரலும் எழுப்பாமலும்,எந்த திட்டங்களையும் மதுரைக்கு கொண்டு வரமாலும், மேகதாது-முல்லை பெரியாறு அணை விவகாரம்,கனிமவள கொள்ளை போன்ற பிரச்சனைகளுக்கு வாய்மூடி மௌனம் சாதிப்பதும், மதுரை தொகுதி மக்களை ஏமாற்றும் விதமாக துரோகம் விளைவிக்கும் வகையிலும் எம்பி பதவிக்கே தகுதி இல்லாத சு.வெங்கடேசன் அவர்களை இந்துமக்கள்கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் சு.வெங்கடேசன் பேசும் போது நீட் போராட்டத்தை பற்றியும், மத்திய கல்விதுறை அமைச்சர் பதவி விலகியதையும்,பாரத பிரதமர் உள்துறை அமைச்சருக்கு எதிராகவும் வாய்கிழிய பேசு உள்ளாரே தவிர தனது தொகுதியில் நடைபெறும் மக்களின் அன்றாட பிரச்சனைகளை பற்றியோ,ஊழல்கள் பற்றியோ,அவலங்கள் பற்றியோ பேசவில்லை. நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் யாரும் நீட் தேர்வுக்கு எதிராக போராட முன்வரவில்லை. போராடியது யார் என்றால் சீனா,அமெரிக்கா,பாகிஸ்தான் போன்ற வெளிநாட்டு அந்நிய சக்திகள், கம்யூனிஸ்ட்,காங்கிரஸ் போன்ற எதிர்கட்சிகளின் தூண்டுதலின் பேரில் மாணவர்கள் என்ற போர்வையில் தேசவிரோத சக்திகளால் கலவரத்தை உண்டாக்குவதற்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம்.

மேலும் கடந்த திமுக ஆட்சியில் கூட்டணியில் இருக்கும் போது திமுக அமைச்சர்கள் யாரும்.சு.வெங்கடேசனை கண்டு கொள்ளவில்லை.ஆனால் தற்போதைய தவெக ஆட்சியில் அமைச்சர் நிர்மல்குமாரை உடன் வைத்து கொண்டு நான் சொல்வதை தான் செய்யவேண்டுமென்றும்,எனது மேற்பார்வையில் தான் அரசு நிர்வாகம் செயல்படவேண்டுமென்றும் மதுரை மாவட்ட அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு போடும் வகையில் மதுரையில் ஒரு குட்டி அரசாங்கமே சு.வெங்கடேசன் நடத்தி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் பயங்கரவாத அமைப்பு என்று இந்திய அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட நக்ஸ்லைட், மாவோஸ்ட் போன்ற நக்சல் அமைப்புகளின் தோழன்மை அமைப்பான மக்கள் அதிகாரம்,மகஇக,,தமுஎச,DYPI,SFI போன்ற அமைப்புகள் சு.வெங்கடேசன் ஆதரவால் மதுரையில் தலை தூக்கி சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது.இது வடமாநிலங்கள் போல தமிழகத்திற்கே மிகப்பெரிய ஆபத்தாக அமைந்து விடும்.

ஆகவே மதுரைமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தொகுதி மக்களுக்கு தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமலும், மக்களின் நன்மைக்கும்,தனது தொகுதியின் வளர்ச்சிக்கும் எந்த ஒரு திட்டங்களுக்கும் வெற்றி பெற்ற நாளில் இருந்தே இன்றைய வரைக்கும் பாராளுமன்றத்தில் எந்த ஒரு குரலும் கொடுக்காமல் எம்பி என்ற பெயரில் தொகுதிக்கு சம்பந்தமில்லாத வடமாநில பிரச்சனைகளுக்கும், சாதி,மொழி பிரிவினைவாத சக்திகளுக்கும், தடைசெய்யப்பட்ட நக்சல் அமைப்புகளுக்கும் துணைபோகும் விதமாகவும்,.தேசவிரோத இஸ்லாமிய கிறிஸ்தவ மதவாத தீயசக்திகளுக்கு ஆதரவாகவும்,இந்து சனாதன தர்மத்திற்கு எதிராகவும்,நடிகர் நடிகைகளுக்கு சுற்றுலா வழிகாட்டி (கெய்டு) வேலை பார்க்கும் விதமாக மதுரை தொகுதி மக்களுக்கு துரோகம் விளைவிக்கும் வகையில் மட்டுமல்லாமல் திமுகவிற்கு துரோகம் செய்யும் வகையில் கடந்த ஆட்சியில் திமுகவுடன் சவாரி செய்து விட்டு தற்போது தவெக ஆட்சியில் சவாரி செய்து தன்னை அதிமேதாவி போல அதிகார மமதையில் செயல்பட்டு வரும் மக்கள் பிரதிநிதிக்கே தகுதியற்ற சு.வெங்கடேசன் அவர்கள் எம்பி பதவியை உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும்.

இல்லையெனில் கோயில் மாநகரமான தூங்கா நகரத்தை குப்பை மாநகரமாக மாற்றி சாதனை படைத்து உலகெங்கும் உள்ள மக்களிடையே மதுரை தொகுதி மக்களை தலை குணிய வைத்த எம்பி.வெங்கடேசனுக்கு பாடம் புகட்டும் வகையில் சு.வெங்கடேசனுக்கு குப்பை தொட்டி விருது வழங்கும நிகழ்வு இந்துமக்கள்கட்சி சார்பில் விரைவில் நடத்தப்படும் என்பதை இந்த அறிக்கையின் மூலமாக தெரிவித்து கொள்கிறேன்.