• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

கிரிக்கெட் போட்டிகளுக்கு புதிய ஸ்பான்சர்கள் ஒப்பந்தம்..!

Byவிஷா

Jan 10, 2024

இந்தியாவில் நடைபெறும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளுக்கும், புதிய ஸ்பான்சர்களை ஒப்பந்தம் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.), இந்தியாவில் நடத்தும் சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளுக்கான புதிய ஸ்பான்சர்களை நேற்று ஒப்பந்தம் செய்து அறிவித்துள்ளது. அதன்படி நடப்பாண்டு முதல் 2026 வரை இந்தியாவில் நடைபெறும் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளுக்கு ஸ்பான்சர்களாக ரிலையன்ஸ் குழுமத்தின் கேம்பா மற்றும் ஆட்டம்பெர்க் டெக்னாலஜிஸ் நிறுவனங்களை பி.சி.சி.ஐ. ஒப்பந்தம் செய்துள்ளது. நடப்பாண்டு முதல் 2026 வரை இந்தியாவில் நடைபெறும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளுக்கும் ஸ்பான்சர்களாக இவை செயல்பட உள்ளன.