• Mon. Aug 17th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

சென்னை மாநகர பூங்காக்களில வளர்ப்பு நாய்களுக்கு புதிய கட்டுப்பாடு

Byவிஷா

May 7, 2024


சென்னை மாநகராட்சி பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை கொண்டுவர புதிய கட்டுப்பாடுகளை விதித்து, ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது..,

பூங்காக்களின் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும். வளர்ப்பு நாயின் உரிமையாளர், ஒரு நபர் ஒரு நாயை மட்டுமே பூங்காக்களுக்குள் அழைத்து வர வேண்டும். நாயின் கழுத்தில் கயிறு, யாரையும் கடிக்காத வகையில் வாயில் கவசம் கட்டாயம் அணிவித்திருந்தால் மட்டுமே பூங்காவுக்குள் அனுமதிக்க வேண்டும். அந்த நாய்களுக்கு தடுப்பூசி போட அறிவுறுத்துவதுடன் கட்டாயம் மாநகராட்சி உரிமம் பெறச்செய்ய வேண்டும். தெரு நாய்கள் மற்றும் கயிறு கட்டப்படாத நாய்களை பூங்காக்களுக்குள் அனுமதிக்கக்கூடாது. பூங்காவில் குழந்தைகள் விளையாடும் பகுதியில் நாய்களை அனுமதிக்கக்கூடாது.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.