• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு இளைஞர் சம்பவ இடத்தில் பலி..,

ByP.Thangapandi

Aug 17, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேலத்திருமாணிக்கம்- தாடையம்பட்டி விலக்கு என்ற இடத்தில் எழுமலை – கோபாலபுரத்தைச் சேர்ந்த ஜெகன், வாசு கண்ணன், ரோகித்குமார் மற்றும் திருப்பூரைச் சேர்ந்த ஷாஜகான் ஆகிய நான்கு இளைஞர்களும் ஒரே இருசக்கர வாகனத்தில் புதிய மொபைல் போன் வாங்குவதற்காக எழுமலையிலிருந்து பேரையூர் சென்றதாக கூறப்படுகிறது.,

இந்நிலையில் கீழத் திருமாணிக்கத்திலிருந்து டி. இராமநாதபுரம் நோக்கி கரம்பை மண் ஏற்றி சென்ற டிப்பர் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் உட்கார்ந்து சென்ற திருப்பூரை சேர்ந்த ஷாஜகான் என்ற இளைஞர் சம்பவ இடத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது., மேலும் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.,

சம்பவமறிந்து விரைந்து வந்த டி. இராமநாதபுரம் போலீசார் படுகாயம் அடைந்த ஜெகன், வாசு கண்ணன், ரோகித்குமார் என்ற மூன்று இளைஞர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காகவும் கோயம்புத்தூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.,

மேலும் சம்பவ இடத்தில் பலியான ஷாஜகான் என்ற இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.,