கோவை, பூண்டி வெள்ளியங்கிரி கோவிலுக்கு செல்லும் ரோட்டை ஒற்றையானை வழி மறித்தால் பரபரப்பு ஏற்பட்டது. பைக்கில் சென்றவர் யானையிடம் சிக்கியதால் அதிர்ஷ்டசமாக உயிர் தப்பி வந்த ஓடினார். இதில் பைக் சேதமானது.

தென்கயிலாயம் என்று பக்தர்களால் போற்றப்படும் பூண்டி வெள்ளியங்கிரி சிவன் கோவில், கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்து உள்ளது.
வெள்ளியங்கிரி கோவில் சுமார் 5.5 கி.மீ. தூரம் செல்லும் மலைப் பாதையில் வெள்ளை விநாயகர் கோவில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதை வனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்றவற்றை கடந்து சென்றால் 7 -வது மலையில் வீற்று இருக்கும் சுயம்புலிங்கத்தை தரிசிக்க முடியும்.
இந்த மலைப்பாதை கரடு, முரடானதாக இருக்கும். மேலும் இந்த மலைப் பாதையில் ஏற பக்தர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் மே மாதம் வரை அனுமதி வழங்கப்படும். இந்த நாட்களில் ஏராளமானவர்கள் மலையேற்றத்தில் ஈடுபடுவார்கள்.
பூண்டி அடிவார தலம்

கோவை மாவட்டம் மட்டுமின்றி சென்னை, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் இளைஞர்கள், முதியவர்கள் என பலர் மலையேற்ற பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.
மே மாதத்திற்கு பிறகு பக்தர்கள் மலையேற அனுமதி இல்லை. தொடர்ந்து அடிவாரப்பகுதியில் அமைந்துள்ள பூண்டி ஆண்டவர் சிவன் கோவிலில் பக்தர்கள் வழிபாடு நடத்தி செல்வது வழக்கம்.
மேலும், சனிப்பிரதோஷ வழிபாடு, அமாவாசை பூஜை, ஆடி வெள்ளி பூஜை உள்ளிட்ட ஏராளமான விசேஷ வழிபாடுகள் நடப்பது வழக்கம். நேற்று முன்தினம் மாலை கடைசி ஆடி வெள்ளி என்பதால், வழக்கத்தை விட பூண்டி வெள்ளியங்கிரி மலையடிவார கோவிலில் கூடுதலான பக்தர்கள் கூட்டம் இருந்தது. இது தவிர பல்வேறு வழிமாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுற்றுலா பயணிகளாக தரிசித்ததற்கு வந்ததால் கோவிலில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோவிலில் தரிசனத்தை முடித்து விட்டு நேற்று மாலை, பஸ், கார், பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் தரிசனத்தை முடித்து விட்டு மலையடிவார கோவிலில் இருந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.
அப்போது பூண்டி வெள்ளிங்கிரி மலைக் கோவிலுக்கு செல்லும் ரோட்டில் உள்ள எஸ் வளைவில் திரும்பிய போது, ஒற்றை யானை இரட்டை கடக்க முற்பட்டது. அப்போது ரோட்டில் வேகமாக பைக்கில் சென்று கொண்டு இருந்தவர் யானையின் அருகே சென்றதும் பைக்கை நிறுத்திவிட்டு அங்கிருந்து கிழக்கு நோக்கி ஓட்டம் பிடித்தார். இதில் ஆவேசம் அடைந்த ஒற்றை யானை அவரை நோக்கி பிளிளியவாறு துரத்தியது. பின்னர், அந்த பைக் அருகே சென்று சிறிது நேரம் நின்று கொண்டு இருந்தது. பின்னர் ஆத்திரத்தில் அந்த பைக்கை மிதித்து விட்டு வனப்பகுதிக்குள்ளே சென்றது. இதனால், கோவில் மலை அடிவாரத்தில் இருந்து, கார், பைக் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் புறப்பட்டு வந்த வாகன ஓட்டிகள் சிறிது நேரம் அதே இடத்தில் நின்று கொண்டு இருந்தனர்.
பின்னர் ஒற்றை யானை அங்கு இருந்து வனப்பகுதிக்குள் சிறிது நேரம் சென்ற பிறகு இரு பக்கமும் வாகன ஓட்டிகள் ரோட்டை கடந்து சென்றனர். இச்சம்பவத்தால் பூண்டி வெள்ளிங்கிரி கோவில் மலையடி வரப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து, வனத்துறையினர் கூறும்போது;
பூண்டி வெள்ளியங்கிரி கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்களது வாகனங்களை கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை ரோட்டின் ஓரங்களில் நிறுத்தவோ, நிறுத்தி போன் பேசவோ, செல்போனில் வீடியோ, போட்டோவோ எடுக்கவோ கூடாது. மேலும், வாகனங்களை நிறுத்தி விட்டு ரோட்டோரத்தில் உள்ள வனப்பகுதிக்குள் நடந்து செல்லக்கூடாது என பக்தர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.





