

வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதை அடுத்து சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில், அந்தமானில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 13ம் தேதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று முதல் நான்கு நாட்களுக்கு நீலகிரி, கோவை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நாளை நீலகிரி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் நவம்பர் 14ஆம் தேதி நெல்லை குமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
