• Tue. Apr 22nd, 2025

லோயர் கேம்ப்பில் புதிய சமுதாயக் கூடம் – எம்எல்ஏ மகாராஜன் ஆய்வு…

தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியின் 21 வது வார்டு பகுதியான லோயர்கேம்பில் ரூபாய் 40 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சமுதாய கூடத்தை ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் ஆய்வு செய்தார்.

கூடலூர் நகராட்சியின் 21 வது வார்டு பகுதியாக உள்ளது லோயர் கேம்ப். இங்கு, 15 ஆவது மாநில நிதி குழு திட்டத்தில் இங்குள்ள லோயர்கேம்ப் அம்பேத்கார் காலனியில் ரூபாய் 40 லட்சம் செலவில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை சில மாதங்களுக்கு முன்பு நகர் மன்ற தலைவர் பத்மாவதி லோகந்துரை தலைமையில், ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் முன்னிலையில் நடைபெற்றது.

தற்போது சமுதாய கூடத்தின், அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தை ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது நகர் மன்ற தலைவர் பத்மாவதி லோகந் துரை, கூடலூர் நகராட்சி ஆணையாளர் கோபிநாத், திமுக நகரச் செயலாளர் லோகந்துரை, நகர் மன்ற உறுப்பினர் தினகரன் உட்பட பலர் இருந்தனர்.