சென்னையில் அமைய உள்ள புதிய விமான நிலையம் மற்றொரு மைல்கல் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
பரந்தூர் புதிய விமானநிலையம் தமிழ்நாட்டை 1ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்கும் குறிக்கோளில் மற்றொரு மைல்கல் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ள அவர் “தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு படிக்கட்டாக பரந்தூர் புதிய விமான நிலையம் அமையும்,எதிர்காலத்தில் உலக நாடுகளுடன் ஒப்பிட்டு வளர்ச்சியை காட்டும் வகையில் திராவிட மாடல் அரசு செயல்படுகிறது என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.