
நீட் தேர்வு முடிவு வெளியான நிலையில் தற்கொலைகளை தடுக்கும் பொருட்டு மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் முடிவு வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை.17ம் தேதி நடந்த இத் தேர்வை தமிழகத்தைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். இந்த நிலையில் நீட் தொடர்பான தற்கொலைகளைத் தடுக்கும்பொருட்டு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல அலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் கடும் மன அழுத்தத்தில் இருக்கும் 564 மாணவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவாதாகவும் அவர் கூறியுள்ளார்.
