• Wed. Apr 29th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

அமைச்சர்கள் முதல்வருடன் ஆலோசனை..,

ByS.Ariyanayagam

Apr 29, 2026

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவால் முதல்வர் ஸ்டாலினுடன் திடீர் ஆலோசனை ஈடுபட்டனர்.
2011ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஐ.பெரியசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு, 2020ம் ஆண்டு அவர் மீது சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.

இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள வழக்கை நீதிமன்றங்கள் ரத்து செய்துள்ள நிலையில், அமலாக்கத்துறையின் வழக்கு நிலைக்கத்தக்கதல்ல என்ற வாதத்தை ஏற்று வழக்குப்பதிவை ரத்து செய்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டார். இதையடுத்து மகிழ்ச்சி அடைந்த அமைச்சர் பெரியசாமி மற்றும் அமைச்சர் சக்கரபாணி எம்எல்ஏ செந்தில்குமார் ஆகியோர் கொடைக்கானலில் தங்கி இருந்த முதல்வர் ஸ்டாலினுடன் நேற்று மாலை திடீர் ஆலோசனை நடத்தினர். அப்போது அடுத்து அமையப்போகும் ஆட்சி குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.