• Mon. Nov 11th, 2024

உசிலம்பட்டி பகுதியில் நவராத்திரி கொலு

ByP.Thangapandi

Oct 3, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள திருக்கோவில்களில் இன்று நவராத்திரி திருவிழா துவங்கியதை முன்னிட்டு நவராத்திரி கொலு அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

உசிலம்பட்டி அருகே ஆனையூர் மீனாட்சியம்மன் சமேத ஐராவதேஸ்வரர் கோவிலில் நவராத்திரி கொலு அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதே போன்று உசிலம்பட்டி கவணம்பட்டி ரோட்டில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவில், மேலப்புதூர் பத்திரகாளியம்மன் கோவில், மாதரை கிராமத்தில் உள்ள பத்திரகாளியம்மன் கோவில் என பல்வேறு கோவில்களில் நவராத்திரி கொலு அமைக்கப்பட்டு, அம்மன்களுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *