முதலைக்குளம் முத்தாலம்மன் கோவில் புரட்டாசி உற்சவ திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான முளைப்பாரி ஊர்வலம் வெகுவிமர்சையாக எடுத்துச் செல்லப்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே முதலைக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள முத்தாலம்மன் கோவிலில் புரட்டாசி உற்சவ திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான முளைப்பாரி ஊர்வலம் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.
சாமிகளின் சிலைகளை தத்துரூபமாக முளைப்பாரிகளில் வடித்து வந்த முளைப்பாரிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது, மேலும் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைபாரிகளை தலையில் சுமந்து வர ஆட்டம் பாட்டத்துடன் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அங்கு உள்ள குளத்தில் கரைக்கப்பட்டது.