இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை அடுத்து 75வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கொண்டாட தயாராகி வருகிறது. பிரதமர் மோடி ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும் என கோரியிருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
அந்த வகையில் மக்களுக்கு தேசிய கொடி கிடைக்கும் வகையில் தபால் நிலையங்களில் தேசிய கொடி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை குனியமுத்தூரை சேர்ந்த நகை தொழிலாளி வி.எம்.டி. ராஜா என்பவர் வீட்டில் தேசியக் கொடியை ஏற்றி வைப்பது போன்று 300 மில்லி கிராம் தங்கத்தில் வடிவமைத்து உள்ளார். இந்நிலையில் சென்னை நகரத்தில் உள்ள அண்ணா சாலை தபால் நிலையம் உள்பட பல தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்கப்படும். ரூ.25 முதல் தேசிய கொடி விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகின கொடிகளை சில்லரையாகவும் மொத்தமாகவும் பொதுமக்கள் வாங்கி கொள்ளலாம் என்றும் இணையதளத்தின் மூலம் பதிவு செய்தும் தேசியக்கொடியை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.