

தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தேர்வாகியுள்ளார்.
நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பல்வேறு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தேர்வாகியுள்ளார். இந்த விருதை சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சுதந்திர தின விழாவில் நல்லகண்ணுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கவுரவிக்க உள்ளார். 96 வயதாகும் நல்லகண்ணு சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த முறை தகைசால் தமிழர் விருது சிபிஎம் கட்சியை சேர்ந்த சங்கரைய்யாவுக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
