• Fri. Apr 18th, 2025

மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து விலை அறிவிப்பு

ByA.Tamilselvan

Jan 22, 2023

மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து விலை அறிவிப்பு
A.TAMILSELVAN
கொரோனா தொற்று மீண்டும் மெதுவாக பரவத்துவங்கியுள்ளதால் மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசிக்கு விற்பனைக்குவந்துள்ளது. அதன்விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருவதால், மூக்கு வழியாக செலுத்தி கொள்ளும் பாரத் பயோடெக்கின் ‘இன்கோவாக்’ தடுப்பு மருந்துக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த மாதம் அனுமதி வழங்கியது.
ஜன. 26ம் தேதி, ‘இன்கோவாக்’ தடுப்பு மருந்து அறிமுகப்படுத்தப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனத் தலைவர் கிருஷ்ணா எல்லா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
முன்னதாக இன்கோவாக் மருந்தின் தனியார் சந்தை விலை 800 ரூபாய்க்கும், அரசு விநியோகத்துக்கான விலை 325 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்திருந்தது.