• Fri. Apr 19th, 2024

மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி..!!

ByA.Tamilselvan

Sep 6, 2022

கொரோனாவுக்கு மூக்கு வழியே செலுத்தும் நாட்டின் முதல் தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2 ஆண்டுகளை கடந்த பின்பும் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இந்தியாவில் கிட்டதட்ட130கோடி பேருக்கு போடப்பட்டுள்ளது.தற்போது 2 டோஸ்கள் முடிந்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது…
அந்த வகையில், மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. பிபிவி154 எனும் பெயர் கொண்ட இந்த மருந்தின் மூன்றாம் கட்ட சோதனைக்கு அண்மையில் இந்திய மருந்துத் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியது. 18 வயது முதல் 60 வயதுள்ள பிரிவினருக்கு வெற்றிகரமாக நடத்தப்பட்ட கடந்த இரண்டு கட்ட சோதனைகளில் கிடைத்த முடிவுகளின் அடிப்படையில், மூன்றாவது கட்டமாக மனிதர்களிடையேயான சோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் சோதனை முறையில் 900 பேருக்கு செலுத்தி பரிசோதிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை நிறைவு பெற்றுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் அண்மையில் அறிவித்தது.
இந்நிலையில், பிபிவி154 எனும் பெயர் கொண்ட மூக்கு வழியை செலுத்தும் நாட்டின் முதல் கொரோனா தடுப்பு மருந்தான இதற்கு தற்போது மத்திய அரசு அவசரகால அனுமதி வழங்கியுள்ளது.இந்த மருந்தை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *