• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சிவகாசியில் ‘நம்வீட்டு மாடித்தோட்டம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

Byவிஷா

Mar 27, 2023

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ‘நம் வீட்டு மாடித்தோட்டம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது சிவகாசி மாநகராட்சியில், மேயர் சங்கீதா தலைமையில் “பூச்சி மருந்து விஷமில்லா பசுமையான நம் வீட்டு மாடித்தோட்டம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். “உணவே மருந்து” மற்றும் “இயற்கை உணவுகளின் பயன்கள்” குறித்தும், மாடித்தோட்டம் அமைப்பதன் நன்மைகள் குறித்தும், சிரிப்பு யோகா குறித்தும் இயற்கை மருத்துவர் மாறன், மாடித்தோட்ட நிபுணர் பாலாஜி, சிரிப்பு யோகா மாஸ்டர் கிரிதரன் ஆகியோர் விளக்கினர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு க்ரோபேக் மற்றும் கீரை விதைகள் வழங்கப்பட்டது.