• Sat. Apr 27th, 2024

பல்லடம் அருகே அல்லாளபுரம் அரசு நடுநிலைப் பள்ளியின் வைர விழா

ByS.Navinsanjai

Mar 27, 2023

பல்லடம் அருகே அல்லாளபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் 60 ஆம் ஆண்டு வைர விழா நடைபெற்றது. ஏராளமான மாணவ மாணவியர் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அசத்தல்!! பார்வையாளர்கள்,பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பரவசம்.


திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அல்லாளபுரத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இதில் சுமார் 250 மாணவ மாணவியர் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சேர்ந்து பயின்று வருகின்றனர். இப்பள்ளி துவங்கி 59 ஆண்டுகள் நிறைவடைந்து 60 ஆவது ஆண்டை எட்டியுள்ளது.இதனை அடுத்து அறுபதாவது ஆண்டு வைர விழாவை முன்னிட்டு இன்று பள்ளி வளாகத்தில் நடனம்,பாட்டு, பேச்சு, கவிதை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ மாணவியர் ஏராளமானோர் கலந்து கொண்டு வில்லுப்பாட்டு பாடியும், நடனமாடியும், பாட்டுப்பாடியும், நாடகங்களை நடித்தும் தங்களது திறனை வெளிப்படுத்தி அசத்தினர். இதனை பெற்றோர், பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்து பரவசமடைந்தனர்.


இந்நிகழ்ச்சியில் பல்லடம் ஒன்றிய குழு துணைத் தலைவர் பாலசுப்ரமணியம்,தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில் தனியார் பள்ளியில் கல்வி பயிலும் மோகத்தை அறவே தவிர்த்து அரசு பள்ளிகளில் பெற்றோர் தங்களது குழந்தைகளை ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை கட்டாயம் சேர்க்க வேண்டும் ஏனென்றால் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதில் பயனடையும் வகையில் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் உதவ வேண்டும். எனவே இதனை ஊக்குவிக்கும் வகையில் அல்லாளபுரம் அரசு பள்ளியில் அறுபதாவது ஆண்டை முன்னிட்டு வைர விழாவாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாகவும் இதில் ஆர்வமுடன் மாணவ மாணவியர் கலந்துகொண்டு தங்களது திறனை வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *