• Thu. Jun 11th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

திருமணமான மூன்றே மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம்!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சேதுபதி நகரைச் சேர்ந்தவர் ராமர். இவரது இரண்டாவது மகள் மோனிகாவிற்கும், ஏர்வாடி அருகேயுள்ள பழஞ்சிறையைச் சேர்ந்த தர்மராஜ் என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. ஆனால் இருவரும் திருமணம் செய்து கொள்ள மோனிகாவின் தந்தை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

எனவே மோனிகாவை தர்மராஜ் பழஞ்சிறைக்கு அழைத்து சென்று கடந்த மே 28-ந் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் மோனிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த மோனிகாவின் உறவினர்கள் பழஞ்சிறைக்கு சென்று பார்த்தபோது மோனிகாவின் உடலில் காயம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மோனிகாவின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும் படியும் மோனிகாவின் தாயார் பூமாதேவி கீழக்கரை போலீசில் புகார் அளித்தார். அதனடிப்படையில் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.