மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பிசாசு 2’. ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது,
ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்படத்தில் விஜய்சேதுபதி சில காட்சிகளில் வருகிறார்.இந்தப்படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
ஏற்கெனவே இளையராஜாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகத்தான் கார்த்திக்ராஜாவை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்தார் மிஷ்கின்.
இப்போது படத்தின் படத்தின் பின்னணி இசைச் சேர்ப்பு வேலைகள் நடக்கும் நேரத்தில் கார்த்திக்ராஜாவுடனும் வழக்கம்போல கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது இயக்குநர் மிஷ்கினுக்கு.அதனால், அவரை அழைக்காமல் மிஷ்கினே பிசாசு – 2 படத்திற்கு பின்னணி இசை பணிகளை தொடங்கியுள்ளாராம்
தகவலறிந்த கார்த்திக்ராஜா மிஷ்கின் மீது கடும்கோபத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
மிஷ்கின் படத்திற்கு இசையமைப்பாளராக யார்இருந்தாலும் அவர் தலையீடு அளவுக்கதிகமாக இருக்கும் என்பார்கள்.இப்போது அவர் இசையமைப்பாளராகவும் ஆகியிருக்கிறார்.
மாருதி பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் ‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘டெவில்’. இப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் நடிக்கின்றனர். மிக முக்கியமான திருப்புமுனை பாத்திரத்தில் இயக்குநர் மிஷ்கின் நடிக்கின்றார். இவர்களுடன் சுபஸ்ரீ ராயகுரு அறிமுகமாகிறார்.
இந்தப்படத்துக்குத்தான் இசையமைக்கிறார் மிஷ்கின்.