• Thu. Mar 28th, 2024

கோளாறுகளால் ரத்து செய்யப்பட்ட கியூட் (CUET) தேர்வர்களுக்கு எப்போது தேர்வு..??

Byகாயத்ரி

Aug 8, 2022

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை பயில வரும் மாணவர்களுக்கு கியூட் எனும் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு தேசிய தேர்வுகள் முகமை மூலம் நடத்தப்படுகிறது.

இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்விற்கு நாடு முழுவது 500 நகரங்கள் மற்றும் இந்தியாவின் வெளியிலுள்ள நாரங்கள் என்று 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது நடப்பு கல்வி ஆண்டிற்கான கியூட் நுழைவு தேர்வு கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 17 மாநிலங்களில் சில மையங்களில் முதல் ஷிப்ட் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது. அதனை போல மாலை ஷிப்ட் தேர்விலும் பல மையங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தேர்வு நிறுத்தப்பட்டது. அதன்பிறகு நேற்று முன் தினமும் சில பகுதிகளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து தற்போது புதிய அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டு உள்ளது. அதன்படி, தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக கோளாறுகளால் தேர்வு ரத்து செய்யப்பட்ட மாணவர்களுக்கு வருகின்ற 24 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட உள்ளது என்று அறிவித்துள்ளது. மேலும் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் தேர்வுக்கு சில நாட்களுக்கும் முன்னதாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *