• Mon. Jun 22nd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கூடலூரில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்..,

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் கூடலூர் நகர த.வெ.க.சார்பில் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.தமிழகம் முழுவதும் முதலமைச்சர் விஜய்யின் 52-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தினர் மரக்கன்றுகள் நடுதல், ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களில் உதவிகள் வழங்குதல்,கோவில்களில் சிறப்பு பிரார்த்தனைகள்,பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகளை நடத்தி பரிசு வழங்குதல், கோவில்களில் சமபந்தி விருந்து வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக கூடலூர் நகர செயலாளர் விக்ரம் தலைமையில் விஜய்யின் 52-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.இந்நிகழ்வில் நகர இணைச் செயலாளர் பாண்டித்துரை,நகர பொருளாளர் அஜித்,துணைச் செயலாளர் ஜெனிதா,மகளிர் அணி சேர்ந்த ஷாலினி (ஷாலு பெளட்டிக்), சௌமியா,பிரியா, ஏ.பிரியா, அனிஷ்,மேனகா, ரஞ்சிதா,காயத்ரி பிரியா,வழக்கறிஞர் உறுப்பினர் சந்திர பாலாஜி உட்பட நகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

கூடலூர் நகர த.வெ.க.நிர்வாகிகள் கூறியதாவது:
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகிறார்கள்.தொடர்ந்து கூடலூரில் அன்னதானம் வழங்கியும், பூசெடிகள் ,மரக்கன்றுகளை கொடுத்தும் விஜய்யின் பிறந்தநாளை கொண்டாடி வருகிறோம். தமிழ்நாட்டில் புதிய வெற்றி புரட்சியை உருவாக்கி இருக்கிறார். முதல்வர்.சாதி, மதம், பணம், கடந்து ஒரு அரசியலை கொண்டு வந்து, சமூகப் புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறார். ஊழலை ஒழித்து இப்போதே ஒரு புரட்சியை உருவாக்கியுள்ளார்.அவருக்கு நாங்கள் அத்தனை பேரும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ச்சி அடைகின்றோம் என்று தெரிவித்தனர்.