2021- ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா இன்று முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 7 என்ற பெயர் பொறித்த ஜெர்சியை கேப்டன் மகேந்திர சிங் தோனி வழங்கினார்.
பாராட்டு விழாவில் டோனி பேசியதாவது, பல்வேறு மாநிலங்களில் பணியாற்றிவிட்டு சென்னை வந்தேன். சென்னை மிகச்சிறந்த நினைவுகளை தந்துள்ளது. கிரிக்கெட் மீதான புரிதல் சென்னை ரசிகர்களுக்கு அதிகம். கிரிக்கெட்டை புரிந்து கொள்ள சென்னை பல விதங்களில் உதவியது.

சென்னை அணியின் ரசிகர்கள் நாடு முழுவதும் உள்ளனர். 2008-ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணிக்கு என்னை எடுப்பார்கள் என நினைக்கவில்லை. எனது கடைசி 20 ஓவர் போட்டி சென்னையில் தான் இருக்கும்” என்றதும் அரங்கத்தில் ரசிகர்களின் ஆராவார சத்தம் பிரம்மாண்டமாய் ஒலித்தது.