

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு முடிந்ததும் இதற்கு முற்று புள்ளி வைக்கபடும். அதன் பிறகு எனது ஆட்டம் துவங்கும் என சென்னை விமான நிலையத்தில் சீமான் பேட்டி அளித்துள்ளார்.
காவல் ஆய்வாளர் ப்ரவீன் போன்றவர்களின் முறையற்ற அனுகுமுறையால் காவல் துறைக்கே களங்கம் என்றும், தனக்கு மட்டுமே வழங்கபட்ட அழைப்பானையை அனைவரும் படிக்கும் விதத்தில் ஊடகங்கள் முன்னிலையில் ஒட்டிய அனுகுமுறையே தவறானது என்றார். அதேபோல் காவலாளி அமல்ராஜோ அல்லது சுபாகரோ அழைப்பானையை ஒட்டியபோது தடுக்கவில்லை, அப்படி தடுத்திருந்தால் தவறு என்றும், ஒட்டி சென்ற பின்னர் காவல் துறைக்கு வீட்டில் என்ன வேலை என்றும் கேள்வி எழுப்பியவர், தனக்கு அழைப்பானை குறித்து தகவலளித்த பின்னர் அது எதற்கு கதவில் ஒட்டியிருக்க வேண்டும் என்றார். மேலும் திமுக கருத்தியல் ரீதியாக எதிர்க்காமல் தனிபட்ட முறையில் அனைவரையும் எதிர்ப்பதாகவும், இதை பார்க்கும் போது, அந்த பயம் இருகட்டும் என்ற திமிர் தனக்கு ஏற்படுவதாகவும் தெரிவித்தார். அன்னா பலகலைகழக விவகாரம், சாரயம் காய்ச்சுவது, பள்ளிகளில் போதை பொருள் புழக்கம், கூட்டு பாலியல் பலாத்காரம் போன்றவற்றில் சட்டம் தன் கடமையை ஏன் செய்யவில்லை என கூறிய அவர், கடந்த 15 ஆண்டுகளாக ஒரு பெண்ணை பேச வைத்து தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் கற்பழித்து வருவதாக தெரிவித்தார். மேலும் இந்த உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில் அது முடிந்ததும் இதற்கு முற்று புள்ளி வைக்கபடும் என்றும், அதன் பின்னர் இதை வைத்து ஆடியவர்கள் மீது தனது ஆட்டம் துவங்கும் என்றும் தெரிவித்தார்.

