

மூன்று அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிக்கப் பட்டு உள்ளது. திராவிட மாடலை விட்டு தமிழ்நாடு மாடல் சொல்ல திராணியற்றது திமுக. அரசியலில் கெட் அவுட் சொல்லி மீண்டும் சினிமாவில் நடித்து கட் அவுட் வைக்க விஜய் சென்று விடுவார்.
சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
முதலமைச்சருக்கு எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். தமிழை பாதுகாக்கிறோம் என்று சொல்லிட்டு அமைச்சர்கள் பங்கேற்கும் விழாவில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்படுவதில்லை என்பதை கண்டனமாக பதிவு செய்கிறேன். பிரதமர், உள்துறை மந்திரி ஆகியோரை பார்ப்பது இருக்கட்டும் திருவொற்றியூர் அரசு விழாவில் 3 அமைச்சர்கள் கலந்து கொண்டதில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்படவில்லை. நீங்களே தமிழை பாதுகாக்கவில்லை. சம்ஸ்கிருதத்தை கொண்டு வர இந்தியை கொண்டு வருகிறார்கள் என பொய் பிரச்சாரத்தை பரப்புகின்றனர். திராவிட மாடல் என்று சொல்வதை விட தமிழ் நாடு மாடல் என்று சொன்னால் என்ன? ஒவ்வொரு முறை திராவிட மாடல் என்று சொல்வதன் முலம் தமிழ் என்ற வார்த்தையை புறக்கணிக்கிறீர்கள் என்று அர்த்தம். தமிழ்நாடு என்ற வார்த்தை புறக்கணிக்கிறீர்கள். தெலுங்கு, கன்னடம், மலையாளம் எல்லாவற்றிக்கும் மாடலா நீங்கள். அவர்களுக்கு எல்லாம் சேர்ந்து ஆட்சி புரிகிறீர்கள் என்றால் திராவிட மாடல் ஆட்சி என்னும் நீங்கள் திராவிட மொழியை 3வது மொழியாக்க ஏன் மறுக்கிறீர்கள். நீங்கள் தான் தமிழை திட்டமிட்டு புறக்கணிக்கிறீர்கள். மும்மொழி கொள்கை தனியார் பள்ளிகளில் பின்பற்றப்படுகிறது. நீங்கள் நடத்தும் பள்ளியிலும் கற்பிக்கப்படுகிறது. ஏன் அரசாங்க பள்ளிகளில் மட்டும் இந்த நிலை. தமிழ் நாடு இரு மொழி கொள்கையை தான் பின்பற்றுகிறது என்றால் தனியார் பள்ளிகளில் மும்மொழி கொள்கை ஏன். இந்த கேள்வியை பலமுறை கேட்டும் பதில் சொல்ல வழியில்லை. தனியார் பள்ளிகளில் தமிழை புறக்கணிக்கிறீர்கள்.
தொகுதி மறு சீரமைப்பு வைத்து நாடகம் நடத்த பார்த்தார்கள். ஆனால் உள்துறை மந்திரி வந்து மறு சீரமைப்பு என்பது தமிழகத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இடங்கள் அதிகரிக்கும் என்று கூறி உள்ளார். இல்லாத தோற்றத்தை இருப்பது போல் கண்பித்து மாயை எதிர்த்து போராடி கொண்டு இருப்பது ஸ்டாலினின் பழக்கமாக இருக்கிறது.
காமராஜர் காலத்தில் இருந்து ஆங்கிலத்தை அதிகமாக கற்று கொண்டோம். வட மாநிலங்களில் அதிகமாக ஆங்கிலம் கற்காமல் தாய்மொழி கற்றார்கள். இந்தி என்பது அவர்களுக்கு தாய்மொழி. தமிழை அழித்தால் கோபம் வருமோ அதேபோல் மற்றவர் தாய்மொழியை மதிக்க வேண்டும். அந்த மாநிலத்தில் இருந்து ஒருவர் வந்து இறங்கும் போது அவரது தாய்மொழி அழிக்கப்பட்டு இருக்கும் போது என்ன மரியாதை வைப்பார்கள். சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் தமிழ் எழுதப்பட்டு உள்ளது. மற்றவர்களின் தாய்மொழியை அழிப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது. முதலமைச்சர் எல்லாவற்றிக்கும் பொறுப்பு கிடையாது. ஆங்கிலம் எல்லாரும் படிக்கிறார்கள் என பெருமைப்படுகிறார்.
தமிழ் இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை. 10வது வரை தமிழை கற்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தான் சொல்லி இருக்கிறது. தமிழை புறக்கணித்து புறந்தள்ளுகிறீர்கள். தமிழை பற்றி பிரதமர் தான் பேசுகிறார். நீங்கள் எத்தனை முறை தமிழை பற்றி திருக்குறளை பற்றி பேசி இருக்கிறீர்கள். உலக அரங்கில் தமிழை பற்றி பிரதமர் பேசுகிறார். ஆனால் மேற்கு வங்கம், கேரளா சென்ற போது முதலமைச்சர் எந்த மொழியில் பேசினார். 40 எம்.பி.க்கள் எத்தனை தமிழில் பேசுகின்றனர். ஆங்கில புலமையை காட்டுகின்றனர். 40 பேர் சென்று போண்டா தான் சாப்பிட்டுகின்றனர். 40 பேர் சென்றதும் வேஸ்ட். தமிழ்நாடு மாடல் என்று சொல்ல திராணியற்ற திமுக.
கட் அவுட் மட்டும் வைத்து நடித்து கொண்டு இருந்தவர்கள் இன்று கெட் அவுட் என்று சொல்கிறார்கள். விஜய் கட்சி தமிழ்நாட்டில் மட்டும் இருப்பதால் கெட் அவுட் என்று திமுகவை சொல்லலாம். பா.ஜ.க. பல மாநிலங்களிலும் மத்தியிலும் ஆட்சி செய்வதால் கெட் அவுட் என்று எப்படி சொல்லலாம். கட் அவுட் மட்டுமே வைத்து கொள்ளுங்கள் என்று கெட் அவுட் என மக்கள் சொல்லி விடுவார்கள். அவர் சிக்கிரம் நடிக்க போய் விடுவார். அரசியலில் முக்கியத்துவம் பெற்றால் தான் நடிப்பதை விடுவார். அரசியலில் முக்கியத்துவம் பெறவில்லை என்றால் கட் அவுட்டிற்கு போய் விடுவார்.
பிரசாந்த் கிஷோர் கையெழுத்து போட மாட்டார். தேசியத்தில் இருந்து வந்தவர்கள் யாருமே இவர்களது பிரிவினைவாதத்தை ஏற்க மாட்டார்கள். பிரசாந்த் கிஷோர் பணியாளாக வந்து உள்ளார். அரசியல்வாதியாக வ்ரவில்லை. வெளி மாநிலங்களில் பிரச்சாரத்திற்கு நாங்கள் செல்கிறோம். ஸ்டாலின், உதயநிதி அழைக்க மாட்டார்கள். இந்தியை எதிர்த்து பேசிவிட்டு அங்கே போக முடியாது.
திமுகவின் மொழி கொள்கையை ராகுல் காந்தி ஆதரிக்கிறாரா இந்தி வேண்டாம் போடா என்பதை ஆதரிப்பாரா. பா.ஜ.க.விற்கு தமிழ் மீது பற்று இருக்கிறது. தமிழ் உணர்வு இருக்கிறது. தமிழுக்கு முழு உரிமையாளர் என சொல்ல முடியாது. தமிழிசைக்கும் உரிமை இருக்கிறது.
திராவிட மாடல் என்பதை விட்டு தமிழ்நாடு மாடல் என்று ஸ்டாலினை திருமாவளவன் சொல்ல சொல்லுங்கள். இந்தியாவை ஒற்றுமைப்படுத்த பா.ஜ.க. வால் மட்டுமே முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

