• Thu. Oct 10th, 2024

என் பிறந்தநாள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும்

Byகாயத்ரி

Nov 26, 2021

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கழக தோழர்களக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் வடக்கிழக்கு பருவமழை பாதிப்பை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மக்களுக்கான நிவாரண பணியை முதலமைச்சர் தக்க நேரத்தில் செய்து வருவதை கண்டு நாடே பாராட்டி வருகிறது.

அதேபோல் முதலமைச்சர் வழியில் கழக தொண்டர்களும்,கழக நிர்வாகிகளும் செயலாற்றுவது எனக்கு தெரியும்.2015-ஆம் ஆண்டை விட அதி கனமழை பெய்தும் பெரிய அளவில் பாதிப்பகள் இல்லாததற்கு உங்கள் களப்பணியே காரணம் என்பதை அறிவேன் என்று தெரிவித்துள்ளார்.

எனது தொகுதியான சேப்பாக்கம் –திருவல்லிக்கேணி பகுதியிலும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து வருவதாக கூறியுள்ளார்.அந்த சூழலில் தனது பிறந்தநாளையெட்டி மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்ய கழக தொண்டர்கள் தயாராகுவதை உதயநிதி அறிவதாக கூறினார்.ஆகவே மக்கள் மீண்டு வரும் சூழலில் இந்த பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள்,

மக்களுக்கு உதவும் வகையில் இருக்க வேண்டுமே தவிர முகம் சுழிக்கும் வகையில் இருக்கக்கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளார்.பட்டாசு வெடிப்பது , ப்ளெக்ஸ் பேனர்கள் வைப்பது என்று எந்த ஆடம்பர செலவும் இருக்கக்கூடாது என்றும் இந்த பிறந்தநாள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *