• Sat. Jun 14th, 2025
[smartslider3 slider="7"]

இசை டூ இயக்கம்! யுவனின் புது வழி!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்! தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக ரசிகர்கள் கொண்ட ஒரு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என்று கூறலாம். 1997-ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான அரவிந்தன் என்ற படத்திற்கு இசையமைத்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். நேற்றுடன் யுவன் ஷங்கர் ராஜா திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்தார்.

இந்நிலையில், நேற்று இதற்காக விழா ஒன்று நடத்தப்பட்டது. விழாவில் பல முக்கியமான விஷயங்களை பகிர்ந்த யுவன் தான் ஒரு படம் இயக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதாவது, யுவன் ஷங்கர் ராஜா ஒரு பெண் சார்ந்த ஸ்கிரிப்டை ஒன்றை உருவாக்கியுள்ளாராம். இந்த படத்திற்கான வேலை இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இசை, தயாரிப்பு என கலக்கி வரும் யுவன் தற்போது யுவன் இயக்குனராக களமிறங்கவுள்ளதால் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.