ஸ்டைலிஷான காதல் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளார் கௌதம் வாசுதேவ் மேனன். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட படங்களை தொடர்ந்து மீண்டும் சிம்புவுடன் இணைந்து வெந்து தணிந்தது காடு என்ற படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் மிட் நைட்டில் காதல் மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
கௌதம் வசுதேவ் மேனன் சமீபத்தில் தன்னுடைய 49வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். குடும்பத்தார் மற்றும் திரைத்துறை நண்பர்கள் சூழ மிட் நைட்டில் காதல் மனைவியுடன் ரொமான்டிக்காக கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ இப்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
