விவாகரத்து முடிவுக்கு பின் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா, நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
நட்சத்திர தம்பதிகளாக இருந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் 18 ஆண்டுகளுக்கு பிறகு பிரிவதாக கடந்த மாதம் இணையத்தில் அறிவித்து இருந்தனர். இவர்களின் பிரிவு அறிவிப்பு சினிமா வட்டாரத்திலும் அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் தனுஷ் தற்போது வாத்தி, திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் பிஸியாக இருக்கிறார். அதேபோல ஐஸ்வர்யாவும் ஆல்பம் பாடலை இயக்குவதில் தீவிரம் காட்டி வருகிறார். இவர் இயக்கிய ஆல்பம் சாங் காதலர் தினத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஒரே பார்ட்டிற்கு சென்றுள்ளனர். ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டபோதும் எதுவுமே பேசாமல் கடந்து சென்றுள்ளனர். எனினும், நிச்சயம் இவர்கள் இருவரும் இணைவார்கள் என ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர்!