வேலூர் சிறையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன்பரோல் விடுப்பு கேட்டு உண்ணாநிலைபோராட்டம் நடத்தி வருகிறார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட் டுள்ளார். அவர் பரோல் கேட்டு விண்ணப்பித்தார். நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் முருகன் தனக்கு 6 நாள் பரோல் விடுப்பு வழங்க கோரி 14-வது நாளாக தொடர்ந்து உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார். சிறையில் உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டு வரும் முருகனின் உடல் நிலை மிகவும் மோசமாகி ஆபத்தான நிலையில் இருப்பதாக அவரது வழக்கறிஞர் புகழேந்தி சிறைக் கைதிகள் உரிமை மையத்திற்கு மனு அனுப்பி உள்ளார். சிறைக் கைதிகள் உரிமை மையம் தலை யிட்டு முருகனின் உயிரை காப் பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். இதற்கிடையில், தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் முருகனுக்கு உடல் சோர்வு ஏற்பட்டது. இதன் காரணமாக குளுக்கோஸ் செலுத்தப்பட்டுள் ளது. உணவு சாப்பிடவில்லை. பழங்களை மட்டுமே சாப்பிடுகிறார் அவர் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். தொடர்ந்து முரு கனை கண்காணித்து வருகிறோம் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.