• Fri. Apr 26th, 2024

சரக்கடித்துவிட்டு பாட்டிலை திருப்பி கொடுத்தால் ரூ10 கிடைக்கும்

ByA.Tamilselvan

May 16, 2022

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திருப்பி கொடுப்பவர்களுக்கு ரூ.10 வழங்கும் திட்டம் தொடங்கியது
மது அருந்துபவர்கள் சரக்கடித்துவிட்டு பாட்டில்களை ஆங்காங்கே வீசிவிட்டுச்செல்வது பெரும் சிக்கலை ஏற்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக சுற்றா தளங்களில் அதிக அளவில் மது அருந்துபவர்களால் சுற்றுலா தளங்களில் சுகாதரா சீர்கேடு ஏற்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில், மது பானங்களை வாங்கி பயன்படுத்திவிட்டு காலி மது பாட்டில்களை சாலையோரங்களிலும், வன பகுதியிலும், விளை நிலங்களிலும் சிலா் வீசி வருகின்றனா்.
வன பகுதிகளில் வீசப்படும் காலி மதுபாட்டில்களால் வன உயிரினங்களுக்கும், பொது இடங்களில் வீசப்படும் காலி மதுபாட்டில்களால் சுற்றுபுறமும் மாசுபட்டு நோய் தொற்று ஏற்பட காரணமாகிறது. இதனைத் தடுக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் மையம் மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக மதுபான உற்பத்தி நிறுவனங்கள் மூலம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலையோரங்களில் காணப்படும் காலி மதுபாட்டில்களைச் சேகரித்து அகற்றும் பணி கடந்த 11-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் மதுபானங்களின் காலி பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் மீண்டும் கொடுத்து, ரூ.10-தை வாடிக்கையாளா்கள் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதன் தொடா்ச்சியாக நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் நேற்று முதல் விற்பனை செய்யப்படும் அனைத்து மதுபான பாட்டில்களின் மேலும் டாஸ்மாக் நிறுவனத்தால் கூடுதலாக ரூ.10 பெறப்படும் என்ற ஸ்டிக்கா் ஒட்டப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் திட்டமும் தொடங்கியது. இதற்கிடையே அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வரும் அனைத்து மதுபான பாட்டில்கள் மீது டாஸ்மாக் நிறுவனத்தால் கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படும் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சேகர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *