• Mon. Apr 21st, 2025

உலகின் வளர்ச்சிக்கு காரணமானவர்களை உருவாக்கியது சென்னை பல்கலை- மு.க. ஸ்டாலின்

ByA.Tamilselvan

May 16, 2022

சென்னை பல்கலைக்கழகத்தின் 164வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த விழாவில் பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் ரவி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதல்வர் மு.க ஸ்டாலின் பேசும்போது “இந்தியாவில் மட்டுமல்ல உலகின் வளர்ச்சிக்கு காரணமானவர்களை உருவாக்கியதுதான் சென்னை பல்கலைக்கழகம். எனது தலைமையிலான ஆட்சி காலம் உயர்கல்வியின் பொற்காலமாக மாற வேண்டும். இளைஞர்களுக்கான அனைத்து தகுதிகளையும் உருவாக்கும் கடமையை தமிழக அரசு செய்து கொண்டிருக்கின்றது” என்று அவர் தெரிவித்தார்.