• Sat. Apr 26th, 2025

மாணவர்களுக்கான பல்திறன் போட்டி:

ByKalamegam Viswanathan

Feb 2, 2025

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் இயற்பியல் துறையின் மாணவர்களுக்கான பல்திறன் போட்டி நடைபெற்றது.

மதுரை அருகே, விவேகானந்த கல்லூரியில், இயற்பியல் துறை சார்பாக மாணவர்
களுக்கான பல்திறன் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், மதுரை மாவட்டத்தை சார்ந்த 12 கல்லூரிகள் பங்கு பெற்றன. துறைத் தலைவரும், இயற்பியல் இணைப் பேராசிரியருமான முனைவர்.பி.ஜெயசங்கர் கூட்டத்தை வரவேற்று, கூட்டத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார். கல்லூரியின் துணைமுதல்வர் முனைவர்.கே.கார்த்திகேயன் தலைமையுரையாற்றினார்.
இறுதியாக, இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் ஸ்ரீ.என்.எஸ்.லட்சுமிகாந்தன் நன்றியுரை வழங்கினார். பங்கேற்பாளர்கள் இயற்பியல் தொடர்புடைய கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டது, ஓவியத் திறனை வெளிப்படுத்தும் விதமாக இயற்பியல் தொடர்புடைய வரைதல் போட்டி நடத்தப்பட்டது. ரங்கோலி, வினாடி, வினா மற்றும் மைம் போட்டிகளில் தீவிரமாக மாணவ – மாணவிகள் பங்கேற்றனர். ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை மதுரை தியாகராஜர் கல்லூரி வென்றது. கல்லூரிகளுக்கு இடையேயான பல்திறன் போட்டியில் கல்லூரியின் முதல்வர் முனைவர் தி.வெங்கடேசன் வாழ்த்துரையுடன் நிறைவுபெற்று, போட்டிகளில் வெற்றி மாணவ – மாணவிகளுக்கு பெற்ற பரிசுகளை வழங்கினார். பல மாணவர்கள் தங்கள் கருத்தை பதிவு செய்தனர்.