திருப்பரங்குன்றம் கவன ஈர்ப்பு மக்கள் போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும். கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் கைது – அத்துமீறல்கள் – முருகன் எதிரி திமுக அரசு மற்றும் காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகம் கண்டிக்கத்தக்கது. மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை அளித்தார்.
கடந்த சில வாரங்களாக திருப்பரங்குன்றம் முருகன் மலையை சிக்கந்தர் மலை என உரிமை கொண்டாடும் சதி வலையானது திட்டமிட்டு பின்னப்பட்டு, அதனையொட்டி பல்வேறு சம்பவங்கள் நடந்தன.
திருச்சி மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமது சபாநாயகரிடம் சிக்கந்தர் மலையில் ஆடு, கோழி பலியிட்டு தந்தூரி நடத்த மனு கொடுத்தார். மலைமீது போய் ஆய்வு செய்தார். உடனே ஆட்டை தோளில் போட்டுக்கொண்டு முருகன் மலையில் பலி கொடுக்க போகிறோம் என எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி அவர்களை எல்லாம் மிஞ்சி, தனது அதிகாரத்தை பயன்படுத்தி பிரியாணி எடுத்து சென்று அங்கு உட்கார்ந்து சாப்பிட்டு மலையின் புனிதத்தை கெடுத்து மகிழ்ந்தார். அத்துடன் அந்த மலையே வக்ஃப் வாரிய சொத்து எனவும் கூறினார்.
பல்லாயிரம் சரித்திரம் கொண்ட முருகனின் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் மலையை ஆக்கிமிப்பாளன் மாலிக்காபூர் காலத்தில் தங்கள் இன்னுயிரை கொடுத்து நம் முன்னோர்கள் காப்பாற்றினார்கள்.
ஆனால் இன்று சுதந்திர பாரதத்தில் நம் கண்முன் ஆட்சியாளர்கள் மற்றும் எதிர்கட்சியினர் ஆதரவோடு இந்துக்களுக்கு மிகப்பெரிய அநீதி நடக்கிறது என்பது பக்தர்களுக்கு புரிந்தது.
எனவே திருப்பரங்குன்றம் காக்கவேண்டும் என்ற உணர்வு பக்தர்களிடம் தன்னெழுச்சியாக ஏற்பட்டு வருகிறது என்பதை காண முடிகிறது. வருகின்ற பிப்ரவரி 4ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலையை மலையின் புனிதத்தை காக்க மாபெரும் கவன ஈர்ப்பு அறப்போராட்டம் நடக்க இருக்கிறது.
இதற்கு ஆன்மிக, சமுதாய பெரியோர்கள் உள்ளிட்ட பலர் தார்மீக ஆதரவு தந்து வருகிறார்கள். இது மிகுந்த உத்வேகம் அளிக்கிறது.
இதையெல்லாம் ஒடுக்கும் வகையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஜனநாயக செயல்பாட்டை செய்பவர்கள் மீது காவல்துறை அடக்குமுறையை தொடங்கி உள்ளது. சுவரொட்டி ஒட்டியவர்களையும், நோட்டீஸ் வழங்கியவர்களையும் நள்ளிரவில் பேடித்தனமாக கைது செய்கிறது.
தண்ணடோரா போட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் அருணாசலம் என்பவரை நள்ளிரவு 2 மணிக்கு கைது செய்துள்ளது தூத்துக்குடி மாவட்ட காவல்துறை.
இதேபோல் பலவிதமான நெருக்கடிகளை கொடுக்கிறது.
- திருப்பரங்குன்றம் மலையின் மாமிசம் சாப்பிட்டவர்களை கைது செய்ய துப்பில்லை.
- அங்கிருந்த சமணர் வாழ்ந்த படுகைகளில் பச்சை பெயிண்ட் அடித்தவர்களை கைது செய்யவில்லை.
- ஆட்டை தோளில் போட்டுக் கொண்டு அராஜக ரீதியில் மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்யவில்லை.
- பயங்கரவாத பழனிபாபா, பாஷா ஆகியோரின் போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்யவில்லை
ஆனால் முருகன் மலையை காக்க வேண்டும் என்று ஜனநாயக ரீதியில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்பவர்களை, திருப்பரங்குன்றம் வர எண்ணும் பக்தர்களை , ஆன்மீக அன்பர்களை மிரட்டுகிறது முருகன் எதிரி திமுக அரசு.
முருகன் மழையை பாதுகாப்பதற்காக மக்களை அழைக்கும் விதமாக பக்தர்கள்
தண்டூரா போட்டால் அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்கிறது திராவிட மாடல் அரசு .
நீலகிரி பகுதியில் சிறுவர்களுக்கு முருகன் வேடமிட்டு, திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் பிரச்சனைகளை பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தால்
அங்கேயும் வழக்கு பதிவு செய்திருக்கிறது சர்வாதிகார திமுக அரசு.
இந்துக்கள் அமைதியானவர்கள். அதே சமயம் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே 4ம் தேதி 3 மணிக்கு திட்டமிட்டபடி அறப்போராட்டம் நடக்கும். முருக பக்தர்களே, ஆன்மீக அன்பர்களே நமது உரிமைக்காக ஜனநாயக வழியில் போராட தயங்காதீர்கள்.
பக்தர்கள், தாய்மார்கள், துறவியர்கள் என எல்லா தரப்பினரும் கலந்து கொள்ளும் இந்த அறப்போராட்டமானது தமிழகத்தின் திருப்புமுனையாக இருக்கும். இந்துக்களின் உரிமையை காக்கும் இந்த அறப்போராட்டத்திற்கு பத்திரிகையாளர்கள் ஊடகத்தினர் தங்களது ஆதரவினை நல்க வேண்டும்.
உங்களின் ஒத்துழைப்போடு உலகம் முழுவதிலும் உள்ள முருக பக்தர்களிடம் இச்செய்தியினை கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.