• Sun. Nov 3rd, 2024

தமிழ்நாடு வேளாண்மை முறைகளைப் பற்றி விவரிக்கிறார் முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி

Byமகா

Oct 22, 2022

வேளாண்மை
அக்ரிகல்ச்சர் என்ற சொல்லை இலத்தீன் வார்த்தைகளான ‘அகர்’ மற்றும் ‘கல்சரா’ என்பதிலிருந்து பெறப்பட்டது.இதன் பொருள் நிலம் மற்றும் வளர்த்தல் என்பதாகும். வேளாண்மை என்பது விவசாய நடைமுறைகளான பயிர்கள் சாகுபடி கால்நடை வளர்த்தல் பறவைகள் காடுகள் வளர்த்தல் மீன் பிடித்தல் மற்றும் அதனோடு தொடர்புடைய நடவடிக்கைகளை உள்ளடக்கியதாகும். தமிழ்நாட்டின் முக்கிய தொழில் வேளாண்மை ஆகும் 65% க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்வாதாரத்திற்கு வேளாண் துறை சார்ந்த உள்ளனர்.மாநிலத்தின் பொருளாதாரத்தில் வேளாண்மையே பிரதானமாக இருந்து வருகிறது. வேளாண்மை கிராமப்புற மக்களுக்கு பெரும்பளவில் வேலை வாய்ப்பு அளிக்கிறது. வேளாண்மைக்கும் பொருளாதார வளர்ச்சிக்கு இடையே ஒரு வலுவான தொடர்பு உள்ளது
மாநில பொருளாதாரத்தில் வேளாண்மையின் பங்கு ஏறத்தாழ 21 சதவீதமாகும் இருப்பினும் இது ஆண்டிற்கு ஆண்டு மாறுபடுகிறது. நெல் திணை வகைகள் மற்றும் பருப்பு வகைகள் மாநிலத்தின் முக்கிய உணவுப் பயிர்கள் ஆகும்.
கரும்பு பருத்தி சூரியகாந்தி தென்னை முந்திரி மிளகாய் எல், நிலக்கடலை தேயிலை காப்பி ஏலக்காய் மற்றும் ரப்பர் ஆகியவை முக்கிய வணிக பயிர்கள் ஆகும். வேளாண்மையே தீர்மானிக்கும் புவியியல் காரணிகளாகும்
நிலத்தோற்ற காலநிலை மண் மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவை வேளாண்மை வளர்ச்சியை தீர்மானிக்கும். முக்கிய புவியியல் காரணிகளாகும்.
நிலத்தோற்றம்
தமிழ்நாடு ஆனது மலைகள் பீடபூமிகள் மற்றும் சமவெளிகள் ஆகிய பல்வேறுபட்ட நில அமைப்புகளைக் கொண்டுள்ளது.எடுத்துக்காட்டாக வண்டல் மண் நிறைந்துள்ள காவேரி சமவெளி தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க வேளாண் பகுதியாகும்.பீடபூமி வேளாண்மைக்கு ஒரு அளவிற்கு ஏற்றதாகவும் மலை பிரதேசங்களில் வேளாண் நடவடிக்கைகளை மிக குறைந்த அளவிலும் உள்ளன.
காலநிலை
தமிழ்நாடு பூமத்திய ரேகைக்கு அருகிலும் வெப்ப மண்டலத்திலும் அமைந்துள்ளதால் வெப்ப மண்டல காலநிலை பெறுகிறது. ஆகையால் தமிழ்நாட்டில் வெப்பநிலை ஆண்டு முழுவதும் அதிகமாக உள்ளது. எனவே வெப்பமண்டல பயிர்கள் மட்டுமே பயிரிடப்படுகிறது. நீர் வேளாண்மையை கட்டுப்படுத்தும் முக்கிய காரணி ஆகும். இப்பருவத்தில் பெரும் மலையின் அளவு மற்றும் நீர் பாசன வசதி போன்றவை வேளாண்மையை மிக அதிக அளவில் பாதிக்கிறது.
வேளாண்மைத் தொழிலில் மாறிவரும் தொழில்நுட்பம்
தமிழ்நாட்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த முறைகள் மெதுவாக பாரம்பரிய விவசாயம் முறைகளை இடம்பெற செய்துள்ளது.இந்நிகழ்வு ‘பலையன கழிதலும்’ ‘புதியன புகுதலும்’ என்று இல்லாமல் பழைய பாரம்பரியத்தின் இடர்பாடுகளை களைந்து புதிய முறைகளின் நன்மைகளை விவசாயிகளை சென்றடைய பயிற்சி மையங்கள் தமிழ்நாட்டில் பல்வேறு நிலைகளில் செயல்படுகின்றன.கோயம்புத்தூரில் உள்ள வேளாண் பல்கலைக்கழகமும், தரமணியில் உள்ள எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையமும். இவ்வகை முயற்சிக்கு இழைத்த முன்னேற்றம் அடைய வழிபடுகின்றன சில புதிய வழிமுறைகள் பெயர் பாட்டில் பின்வருமாறு நுண்ணிய நீர்ப்பாசனம் (Micro Irrigation) ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு .
புவியியல் தகவல் அமைப்பு (GIS) மற்றும் உலக அளவில் இடம் சூட்டும் அமைப்பு GPS/ GNSS கொண்டு செயல்படும் துள்ளிய வேளாண்மை முறையாகும்.தமிழ்நாட்டின் வேளாண் முறைகளின் வகைகள் மற்றும் பகுதிகள் வேளாண் வகை பயிரிடப்படும் பகுதிகள் தீவிர தன்னிறைவு வேளாண்மை – தமிழ்நாட்டில் சில பகுதிகள் தவிர்த்து அனைத்து பகுதிகளிலும் பின்பற்றப்படுகிறது தோட்ட வேளாண்மை – மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலை சரிவுகள்.
கலப்பு வேளாண்மை – காவேரி மற்றும் தென் – பெண்ணை ஆற்றுப்படுகைகள்.
மண்
வேளாண்மையில் மிக முக்கியமான கூறுகள் ஒன்று மண் ஆகும். இது பயிர்கள் மற்றும் தாவரங்களின் வளர்ச்சிக்கு தேவையான கனிமச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது. ஆற்றுப் பள்ளத்தாக்குகள் மற்றும் கடற்கரை சமவெளியில் பகுதிகளில் வளமான வண்டல் நிறைந்துள்ளதால் இப்பகுதிகள் மாநில வேளாண் உற்பத்தியில் முக்கிய பங்காற்றுகின்றன. விவசாய முறையை கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம்.நீர்ப்பாசன விவசாயம், நன்செய் விவசாயம், புன்செய் விவசாயம்,
நீர்ப்பாசன விவசாயம்
பாசன விவசாயம் என்பது மனிதனால் ஆண்டு முழுவதற்கும் வயலுக்கும் தண்ணீரே கொண்டு வரும்படி செய்து பயிர் வளர்ப்பதாகும், கிணறு குளம் மற்றும் கால்வாயின் மூலம் வயலுக்கு தேவையான நீர் என்னைக் கொண்டு வர இயலும். தமிழ்நாட்டில் பருத்தி மற்றும் கரும்பு சாகுபடி பாசன வசதி பொறுத்து அமைகிறது.தமிழ்நாட்டில் பெரும்பாலான விவசாயிகள் தீவிர தன்னிறைவு விவசாயம் முறையில் பின்பற்றுகின்றன பயிர்களின் நீர் தேவை மாறுபடுவதால் பாசன வசதி பொறுத்து தமிழ்நாட்டில் வேளாண்மை வளர்ச்சி அமைகிறது என்றால் அது மிக இயலாது
நன்செய் விவசாயம் ஆண்டு முழுவதும் மழையிலோ பாசன வசதிகளோ நீர் கிடைக்கும் நிலங்களில் செய்யப்படும் விவசாயம் நன்செய் விவசாயமாகும் நெல் கரும்பு போன்றவை நன்சி பயிர்கள் ஆகும் தமிழ்நாட்டில் பெரும்பாலான ஆற்று படுகைகளில் விவசாயம் நடைபெறுகிறது.


புன்செய் விவசாயம் பாசனம் அற்று பருவமழையை மட்டுமே நம்பி இருக்கும் நிலங்களில் செய்யப்படும் விவசாயம் புன் செய் விவசாயமாகும்
சிறுதானியங்கள்
புன்செய் பயனுள்ளாகும் வறண்ட மாவட்டங்களான வேலூர் திருவண்ணாமலை ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலியில் மழை மறைவு பிரதேசங்களில் விவசாய முறை நடைபெறுகிறது
நீர்ப்பாசனம்
மாநிலத்தின் பருவமழை சமசீரட்டு நிலையில் உள்ளது. மேலும் இவை பருவ காலத்தில் மட்டும் மே பொழிகிறது எனவே மாநிலத்தில் பயிர் சாகுபடி சிறப்பாக நடைபெற நீர்ப்பாசனம் மிகவும் இன்றியமையாததாகும் வறண்ட காலங்களில் மானாவாரிய பயிர்கள் பயிரிடப்படுகிறது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் நெல் ஆராய்ச்சியை மேற்கொள்ளும் ஒரு இந்திய நிறுவனம் ஆகும்.
இது தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆடுதுறை என்னும் இடத்தில் 1985 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது.
இந்நிறுவனம் இப்பகுதியில் உள்ள கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு நெல் சாகுபடி மற்றும் உற்பத்தி முறை குறித்த ஆராய்ச்சிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது.
தமிழ்நாட்டின் சாகுபடி பருவங்கள்
I ) சொர்ணாவாரி – சித்திரைப்பட்டம் ,2) சம்பா பருவம்- ஆடிப்பட்டம்,3) நவரைப் பருவம்- கார்த்திகைப்பட்டம்
1) சொர்ணாவாரி சித்திரைப்பட்டம்
இப்பருவத்திற்கு கரிப் (Kharif) என்ற மற்றொரு பெயரும் உண்டு மே மாதத்தில் விதைக்கப்பட்டு அக்டோபர் மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது விதைப்பு காலமான மே மாத தமிழ் மாதமான சித்திரை மாதமாக இருப்பதால் இப்பருவம் சித்திரைப்பட்டம் என்று அழைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் – வேளாண்மை
(தமிழ்நாட்டின் வேளாண் பருவகாலங்கள்)
சொர்ணாவாரி ஏப்ரல், மே ஆகஸ்ட், செப்டம்பர் பருத்தி மற்றும் திணை வகைகள்
(சித்திரைப்பட்டம்) சம்பா ஆடிப்பட்டம் ஜூலை ,ஆகஸ்ட் ஜனவரி, பிப்ரவரி நெல் மற்றும் கரும்பு
நவரை நவம்பர், டிசம்பர் பிப்ரவரி, மார்ச் பழங்கள், காய்கறிகள், வெள்ளரி, தர்பூசணி.
(கார்த்திக்கப்பட்டம் ) சம்பா பருவம் – ஆடிப்பட்டம் ஜூலை மாதத்தில் விதைத்து ஜனவரியில் அறுவடை செய்யப்படும் பருவம் சம்பா பருவம் ஆகும் நவரைப் பருவம் – கார்த்திக்கப்பட்டம்
இப்பருவத்திற்கு ரபி (Rabi) குளிர்காலம் என்று மற்றொரு பெயரும் உண்டு நவம்பர் மாதத்தில் விதைத்து மார்ச் மாதத்தில் அறுவடை செய்யும் பருவமே நபரை பருவமாகும்.
தமிழ்நாட்டின் முக்கிய பயிர்களின் பரவல் நெல்

தமிழ்நாட்டின் முக்கியமான உணவுப் பயிர் நெல் ஆகும். பொன்னி மற்றும் கிச்சடி சம்பா தமிழகத்தில் பயிரப்படும் முக்கிய நெல் வகைகளாகும்.மாநிலத்தில் ஏறத்தாழ 3 மில்லியன் ஹெக்டார் பரப்பளவில் நெல் பயிரிடப்படுகிறது.
இப்பயிர் தமிழகம் முழுவதும் பயிரிடப்பட்டாலும் தஞ்சாவூர் திருவாரூர் திருவள்ளூர் காஞ்சிபுரம் விழுப்புரம் கடலூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.நெல் உற்பத்தி செய்யும் இந்திய மாநிலங்களில் தமிழகம் மூன்றாம் இடத்தை வைக்கிறது .தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதி அதிக நெல் உற்பத்தி செய்யும் பகுதியாகும் பிரிக்கப்படாத தஞ்சாவூர் எனவே இப்பகுதி தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது.
திணை வகைகள்
தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு பகுதியினரின் முக்கியமான உணவு திணை வகைகளாகும்.சோளம் கேழ்வரகு மற்றும் கம்பு ஆகிய முக்கியத்தினை பயிர்கள் ஆகும். இவ்வகை பயிர்கள் வறண்ட பிரதேசங்களில் மட்டுமல்லாமல் கடற்கரை சமவெளிகளில் விளைகின்றன.கோயம்புத்தூர் பீடபூமியிலும் கம்பம் பள்ளத்தாக்கிலும் சோளம் பயிரிடப்படுகின்றன கோயம்புத்தூர் தர்மபுரி வேலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் கேழ்வரகு பயிரிடப்படுகிறது ராமநாதபுரம் திருநெல்வேலி கரூர் பெரம்பலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் கம்பு பயிரிடப்படுகிறது.

பருப்பு வகைகள்
பருப்பு வகைகள் புரதச்சத்தின் முக்கிய ஆதரவாக உள்ளன.கொண்டைக்கடலை உளுந்து பச்சைபயிறு துவரம்பருப்பு
தட்டைப்பயிறு மற்றும் கொள்ளு ஆகியவை தமிழ்நாட்டில் விளையும் முக்கிய பருப்பு வகைகளாகும்.பருப்பு வகைகள் கால நிலைக்கு ஏற்றார் போல் பரவலாக பயிரிடப்படுகின்றன.வறண்ட நிலப்பகுதிகளில் நீர்ப்பாசன வசதியுடனும் அல்லது நீர்ப்பாசனம் என்றியோ பயிரிடப்படுகின்றன. மிதமான குளிர்கால காலநிலை மற்றும் குறைந்த மழைப்பொழிவு இங்கு பயிரிட உகந்த சூழல்களாகும். பருப்பு வகைகள் கால்நடைகளுக்கு மிகச்சிறந்த தீவனமாக உள்ளன சென்னை நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பருப்பு வகைகள் பயிரிடப்படுகின்றன. கோயம்புத்தூர் மாவட்டம் கொண்டக்கடலை உற்பத்தியில் மாநிலத்தில் முதல் நிலை வைக்கிறது.வேலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் துவரம் பருப்பை கூடுதலாக உற்பத்தி செய்யப்படுகின்றன.
திருவாரூர் நாகப்பட்டினம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் அதிக அளவில் பச்சைப்பயிர் மற்றும் உளுந்து ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றன.தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கொள்ளு பயிர் கூடுதலாக பயிரிடப்படுகிறது.இயற்கை வேளாண்மையை மேம்படுத்தும் நோக்கத்தோடு மத்திய அரசு ஆனது தேசிய இயற்கை கரிம வேளாண்மை திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.விழிப்புணர்வு ஏற்படுத்துதல் இயற்கை உரங்களை பயன்படுத்துதல் பயிற்சி அளித்தல் போன்றவற்றைத் திட்டம் செயல்படுத்துகிறது.
மேலும் கரிம பொருட்களை மறுசுழற்சி செய்யும் தொழிற்பிடங்கள் உயிர் உரங்கள் உயிரை பூச்சிக்கொல்லிகள் உற்பத்தி செய்யவும் துளிக்கூடங்களுக்கு மாநிலத்தில் நிதியுதீவு அழைத்தல் தரம் மேம்பாட்டு வளர்ச்சி மற்றும் அதனுடைய நடைமுறைப்படுத்தும் குழுமத்தின் மனித வளத்தை மேம்படுத்துதல் போன்றவற்றை இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
எண்ணெய் வித்துக்கள்
நிலக்கடலை, எள், ஆமணக்கு, தென்னை, சூரியகாந்தி மற்றும் கடுகு ஆகியன தமிழ்நாட்டில் பயிரிடப்படும் முக்கிய எண்ணெய் வித்துக்கள் உணவாகும்.உணவு பயன்பாட்டிற்கு மட்டுமல்லாமல் தொழிலகங்களில் மசகு எண்ணெய் மெருக்கு எண்ணெய் பொருட்கள் சோப்பு, மெழுகுவர்த்தி அழகு சாதன பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்திக்கும் இவை பயன்படுகின்றன.நிலக்கடலை மாநிலத்தின் முக்கிய எண்ணெய் வித்துப் பயிராகும்.வேலூர் திருவண்ணாமலை விழுப்புரம் சேலம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நிலக்கடலை உற்பத்தியானது சரிந்து காணப்படுகிறது. தர்மபுரி கடலூர் பெரம்பலூர் மதுரை ஈரோடு ராமநாதபுரம் சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இவை சிறிய அளவில் பயிரிடப்படுகிறது.கோயம்புத்தூர் தஞ்சாவூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தென்னை மரங்கள் அதிக காணப்படுகின்றன.


கரும்பு
தமிழ்நாட்டின் முக்கியமான வாணிப பயிராகும்.இது ஓராண்டு பயிராகும்.இதற்கு அதிக வெப்பநிலை மற்றும் அதிக மழைப்பொழிவும் தேவைப்படுகிறது.இது வெப்ப மண்டல பிரதேசங்களில் நன்கு வளரக்கூடியவை.திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கடலூர், திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு ஆகிய கரும்பு பயிரிடும் மாவட்டங்கள் ஆகும்.
பருத்தி
பருத்தி ஒர் இலைப்பயிர் மற்றும் வாணிப பயிராகும் கரிசல்மண். நீண்ட பனிப்புலி பெற்ற காலம் இடது பக்கம் மற்றும் ஈரப்பதம் வானிலை ஆகியவை பருத்தி பயிரிடுவதற்கு உகந்தவையாகும்.
காலத்தில் ஈரப்பதம் கால நிலையும் அறுவடை காலத்தில் வறண்ட காலங்களையும் பயிருக்கு ஏற்றதாகும். கோயம்புத்தூர் பீடபூமி பகுதியிலும் வைகை மற்றும் வைப்பாறு ஆற்றுப்படி நிலப் பகுதிகளிலும் பருத்தி பயிரிடப்படுகின்றது. மதுரை ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இவை பயிரிடப்படுகின்றன.
தோட்ட பயிர்கள்
தேயிலை, காபி, ரப்பர், முந்திரி மற்றும் சின்கோனா ஆகியன மாநிலத்தின் முக்கிய தோட்ட பயிர்கள் ஆகும். இந்தியாவில் அசாம் மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தேயிலை பயிரிடும் பரப்பு மற்றும் உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது.
நீலகிரி மலைகள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மலைகளில் தேயிலை தோட்டங்கள் காணப்படுகின்றன.
மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் காபி பயிரிடப்படுகின்றன.நீலகிரி மலைகள் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு மலைச்சரிவுகளில் காபி குறிப்பிடத் தகுந்த அளவில் பயிரிடப்படுகிறது.திண்டுக்கல் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள மலைச்சரிவுகளிலும் காபி பயிரிடப்படுகின்றது.காபி உற்பத்தியில் கர்நாடகா மாநிலத்திற்கு அடுத்து தமிழ்நாடு இரண்டாம் இடம் வகிக்கிறது.
ரப்பர் தோட்டங்கள் கன்னியாகுமரியில் அதிகமாக காணப்படுகிறது.தமிழ்நாட்டில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் சரிவுகளில் மிதவெப்பம் மற்றும் ஈரமான காலநிலை உள்ள பகுதிகளில் மிளகு விளைகின்றது.கடலூர் மாவட்டத்தில் பெரும்பகுதிகளில் முந்திரி பயிரிடப்படுகின்றது ஏறத்தாழ 160 மீட்டர் முதல் 1250 மீட்டர் உயரம் வரை உள்ள ஆனைமலை பகுதிகளில் சிங்கோனா பயிரிடப்படுகின்றது ஏறத்தாழ 915 மீட்டர் முதல் 1525 மீட்டர் வரை உள்ள மதுரையைச் சேர்ந்த சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் ஏலக்காய் தோட்டங்கள் காணப்படுகின்றன.
சோளம் கோயம்புத்தூர், திருச்சி திண்டுக்கல். கம்பு விழுப்புரம் தூத்துக்குடி,கேழ்வரகு கிருஷ்ணகிரி , தர்மபுரி, சேலம்
மக்காச்சோளம் பெரம்பலூர் திண்டுக்கல்,கோரா (திணை) சேலம் நாமக்கல்
தமிழ்நாட்டில் வேளாண்மையின் முன்னேற்றம்
சுதந்திரம் அடைவதற்கு முன் தமிழ்நாட்டில் பாரம்பரிய முறையில் விவசாயம் செய்தனர் .சுதந்திரத்திற்கு பின் வேளாண்மை துறையில் அதிக மாற்றமும் முன்னேற்றம் நிகழ்ந்துள்ளன.ஐந்தாண்டு திட்டங்களின் மூலம் நீர்ப்பாசன ஆதாரங்கள் பெரிதும் முன்னேற்றம் கண்டது.பசுமை புரட்சியின் காரணமாக அதிக வீரிய ஒட்டு ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டது பல ரசாயனபுரங்கள் புழக்கத்தில் வந்தன இதன் காரணமாக தமிழ்நாட்டில் வேளாண்மை உற்பத்தி மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டது.ஜமீன்தார் சட்டம் சொத்துரிமை சிறு விளைநிலங்களை ஒன்றுபடுத்துதல் குத்தகை முறை கூட்டுறவு விவசாயம் போன்ற புரட்சிகரமான மாற்றங்கள் சுதந்திர இந்தியாவில் ஏற்பட்டன.தற்போதைய உலக மைய மக்கள் என்ற கோட்பாடும் தமிழ்நாட்டின் வேளாண்மையை துறையில் குறிப்பிட்ட மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
விவசாயம் முன்னேற்றத்திற்கான அரசின் செயல் முறைகள்
1)தரச் சான்றிதழ் பெற்ற விதைகள் அரசால் வெளிவக்கப்படுகிறது.2)தேவையான மணிச்சத்து நுண்ணுயிர் சத்து மானியமாக அளிக்கப்படுகிறது.3)தினமும் 6 முதல் 8 மணி நேர இலவச மின்சக்தி கொடுக்கப்படுகிறது
4)அரசு தானியங்களுக்கு விலை நிர்ணயம் செய்கிறது அதனால் விவசாய நிதி நெருக்கடியில் இருந்து காப்பாற்றப்படுகிறார்கள்.5)உழவர் சந்தையில் இடைத்தரகர்களின் குறுக்கிடற்று விவசாயிகள் இருப்பதன் மூலம் லாபமும் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் நிறைந்த பொருட்களும் கிடைக்க வழிவகை செய்கிறது.
6)இயற்கை இடர்கள் நேரும்போது அரசை விவசாய கடனை தள்ளுபடி செய்கிறது 7)பயிர் காப்பீட்டு திட்டம் நடைமுறையில் உள்ளது. 8)நீலகிரியிலும் கிருஷ்ணகிரியிலும் விவசாய ஏற்றுமதி மண்டலத்தை அரசு அமைத்துள்ளது.
பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்கள் உற்பத்தியினை பெருக்கிட விவசாயிகளுக்கு தரமான விதைகள், உரங்கள், உயிர் உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் ஆகியவற்றை சரியான நேரத்தில் அளிப்பது, ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்ட உயர் தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பது வேளாண் வளர்ச்சிக்கு அடிதளமாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *