• Sun. Jun 15th, 2025
[smartslider3 slider="7"]

குழந்தையை கிணற்றில் வீசி கொல்ல முயன்ற தாய்..,

பாலக்காடு: வாளையாரில் நான்கு வயது மகனை கிணற்றில் வீசிக் கொலை செய்ய முயன்ற தாய் கைது செய்யப்பட்டார்.

வாளையார் மங்கலத்தான்கொள்ளை பாம்பாம்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் சுவேதா(23). தனது கணவரிடம் இருந்து நீண்ட காலமாக பிரிந்து தனியாக நான்கு வயது குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை சுவேதா
சுமார் 6 அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்த கிணற்றில் குழந்தையை வீசியதாக தெரிகிறது. 15 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் குழந்தை அதிர்ஷ்டவசமாக மோட்டார் பைப்பில் தொற்றிக்கொண்டான். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினரும், ஊர் மக்களும் உடனடியாக கிணற்றில் இறங்கி குழந்தையை மீட்டனர்.
உடனடியாக அருகில் இருந்த சுகாதார நிலையத்தில் குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

தகவலைத் தொடர்ந்து வாளையார் இன்ஸ்பெக்டர் என்.எஸ்.ராஜீவ் தலைமையிலான போலீசார் ஸ்வேதாவை கைது செய்தனர். கொலை முயற்சி மற்றும் ஜுவனைல் ஜஸ்டிஸ் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது குறித்து போலீஸார்கள் கூறுகையில், ஸ்வேதா தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக ஆப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குழந்தையை கொலை செய்ய முயன்றதற்கான காரணம் குறித்து விரிவான விசாரணைக்குப் பின்னரே தெரியவரும் என்றும் இந்த சம்பவம் தொடர்பாக ஊர் மக்களிடமும், உறவினர்களிடமும் மீண்டும் வாக்குமூலம் பெறப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.