கோவையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்வதாக தொண்டாமுத்தூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சந்தே கவுண்டன் பாளையம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்ற ஜெயபிரகாஷ் என்பவர் அப்பகுதியில் வேல் என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வருகிறார். மளிகை கடையில் சோதனை செய்த காவல் துறையினர் அங்கு குட்கா புகையிலை பொருள்கள் பதுக்கி வைத்தது தெரியவந்தது. அதில் 24 கிலோ குட்கா மற்றும் கோயிலை பொருட்களை பறிமுதல் செய்த காவல் துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது மனைவி ஜெய சுந்தரி, மற்றும் ஓட்டுநர் தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சத்ய பிரகாஷ் ஆகிய மூன்று பேரும் குட்கா தொண்டாமுத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்நிலையில் பிரகாஷ் என்ற ஜெயபிரகாஷ் மற்றும் ஓட்டுநர் சத்திய பிரகாஷ் ஆகிய இருவரை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய ஜெயப்பிரகாசத்தின் மனைவி ஜெயசுந்தரியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.